இரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோயில்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் இந்துக் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலட்சுமி குபேரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு இரத்தினமங்கலத்தில் உள்ள ஓர் இந்துக் கோயிலாகும். இக்கோயிலே இந்தியாவில் லட்சுமி குபேரனுக்கு உரிய கோயிலாக உள்ளது.[1] இக்கோயிலைச் சுற்றி லட்சுமி கணபதி, குபேரலிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்கள் ஆகியவையும், அருகிலேயே கோசாலையும் உள்ளன.


இத்தலத்தில் மூலவராக குபேரன் உள்ளார். கருவறையில் மனைவி சித்தரிணீயுடன் வலது கையில் பதுமநிதி மற்றும் இடது கையில் சங்கநிதி கொண்டு உள்ளார். குபேரன் சிலைக்கு மேலாக லட்சுமி அமைந்துள்ளார்.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 25.66 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 12.8656°N 80.1367°E ஆகும்.
திருவிழாக்கள்
- தீபாவளி அன்று சிறப்பு பூசைகள்
- வைகுண்ட ஏகாதசி
- அட்சய திருதியை
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads