இரானோஜி சிந்தியா

From Wikipedia, the free encyclopedia

இரானோஜி சிந்தியா
Remove ads

இரானோஜி சிந்தியா (Ranoji Shinde)[1] (இறப்பு:1745 சூலை 3, சுஜால்பூர், மத்தியப் பிரதேசம் ) மேலும் இரானோஜி ராவ் சிந்தியா என்றழைக்கப்படும் இவர் 1720 முதல் 1745 வரை பாஜிராவ் பேஷ்வாவின் கீழ் முதலாம் சாகுஜியின் சேவையில் சர்தாராக பணிபுரிந்தார். மராத்தியர்களின் சிந்தியா வம்சத்தால் ஆளப்பட்ட அரச குவாலியர் மாநிலத்தின் நிறுவனர் ஆவார்.

விரைவான உண்மைகள் இரானோஜி சிந்தியா, ஆட்சிக்காலம் ...

இவர் மகாராட்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய இடமான கண்ணெர்கேராவைச் சேர்ந்த தேஷ்முக் ஆவார்.

பேஷ்வா பாஜிராவ் தலைமையில் சர்தாராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மால்வாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஏனெனில் மராட்டியர்கள் அதை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினர். தனது பிராந்தியத்தில், குவாலியரைச் சுற்றி, இவர் மராட்டிய பேரரசின் திறமையான சக்திக்கு வெளியே இருந்தார்.

1723 இல் மால்வாவின் படையெடுப்பினால் ஏற்பட்ட வெற்றியின் போது, பேஷ்வா பாஜிராவின் கீழ் இருந்த மூன்று மூத்த தளபதிகளில் ஒருவராக இவர் பணியாற்றினார். இவர் 1731 இல் மால்வா குடியேற்றத்தின் ஒரு பகுதியாக கணிசமான நிலப்பரப்பையும் உடைமைகளையும் வாங்கினார். மேலும் 1736 இல் அந்த மாகாணத்தின் சுபேதார் ஆனார்.

இவர் 1731 இல் உஜ்ஜைனில் தனது இடத்தை நிறுவினார். இது 1810 வரை சிந்தியாக்களின் தலைநகராக இருந்தது.

இவர் 1745 சூலை 3 ஆம் தேதி மால்வாவின் சுஜால்பூரில் இறந்தார். இவருக்கு ஜெயப்பாஜி ராவ் சிந்தியா, தத்தாஜி ராவ் சிந்தியா, ஜோதிபா ராவ் சிந்தியா, துகோஜி ராவ் சிந்தியா, மகாதாஜி சிந்தியா என்ற மகன்கள் இருந்தனர். மராட்டியப் பேரரசின் அடுத்தடுத்த வரலாற்றில் இவரது மகன்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads