இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து, இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில், தொடங்கப்பட்டது. 1850களில் இது பற்றிய எண்ணம் உருவானபோதும், 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27 இலேயே, கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் அமைக்கப்பட்ட 54 கிலோமீட்டர் நீளமான பாதையில் முதலாவது சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கண்டிக்கு 1867 இலும், காலிக்கு 1894 இலும், நீர்கொழும்புக்கு 1909 இலும் சேவைகள் ஆரம்பித்தன.
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
Remove ads
தொடர்வண்டிப் போக்குவரத்து வலையமைப்பு
இலங்கையின் தொடர்வண்டிப் பாதைகள் அனைத்தும் 5அடி 6அங்குலத்தில் அமைந்தவை. தலைநகரான கொழும்பில் இருந்து பல்வேறு நகரங்களை நோக்கி விரிந்து செல்கின்றன. இவ் வலையமைப்பானது ஒன்பது பாதைகளைக் கொண்டுள்ளது. இவை, வடக்கில் காங்கேசன்துறை, தலைமன்னார் ஆகிய இடங்களிலும், கிழக்கில், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும், மலையகப் பகுதியில், மாத்தளை, பதுளை ஆகிய இடங்களிலும், தெற்கில் மாத்தறையிலும் மேற்கில் அவிசாவளை, புத்தளத்திலும் முடிவடைகின்றன.
இவற்றில் வடக்கு, கிழக்கு மற்றும் மலைநாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லும் பாதை பொல்காவலை வரை வடகிழக்கு நோக்கிச் செல்கின்றது. பொல்காவலை ஒரு சந்தி ஆகும். இங்கிருந்து ஒருபாதை கிழக்கு நோக்கி மத்திய மலை நாட்டுக்கும், இன்னொன்று வடக்கு நோக்கியும் செல்கிறது. மலைநாடு நோக்கிச் செல்லும் பாதை கண்டிக்கு அருகில் உள்ள பேராதனைச்சந்தியில் இரண்டாகப் பிரிந்து ஒன்று மாத்தளைக்கும் மற்றது பதுளைக்கும் செல்கின்றன.
பொல்காவலையில் இருந்து வடக்கே செல்லும் பாதை மாகோ சந்தியிலிருந்து இரண்டு பாதைகளாகப் பிரிந்து ஒன்று கிழக்கு மாகாணத்துக்கும் அடுத்தது வடமாகாணம் நோக்கியும் செல்கின்றன. கிழக்கு நோக்கிச் செல்லும் பாதை, கல்லோயாச்சந்தியில் பிரிந்து, வடக்கு நோக்கித் திருகோணமலைக்கும், தெற்கு நோக்கி மட்டக்களப்புக்கும் செல்கின்றன. வட மாகாணம் நோக்கிய பாதையிலே தான் மதவாச்சி என்னும் இடத்திலுள்ள சந்தியில் ஒரு பாதை மேற்குப் பகுதியை நோக்கித் தலைமன்னார்பாலம் (தலைமன்னார் பியர்) வரை செல்கிறது. மதவாச்சியிலிருந்து வடக்கே செல்லும் பாதை வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஊடாகக் காங்கேசன்துறையை அடைகின்றது. இந்த வடக்கு நோக்கிய பாதை உள்நாட்டுப் போரின் விளைவாக வவுனியாவுக்கு அப்பால் அகற்றப்பட்டுவிட்டது.தலைமன்னாருக்கான பாதையும் உள்நாட்டுப் போரின் விளைவாக மதவாச்சிக்கு மேற்காக அகற்றப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து தென்பகுதி நோக்கிச் செல்லும் கரையோரப் பாதை இந்து சமுத்திரக் கரையோரமாகச் சென்று காலியூடாக மாத்தறையை அடைகின்றது. மேற்குக் கரையோர நகரமான புத்தளம் நோக்கிச் செல்லும் பாதை, வடக்கே செல்லும் பாதையில் உள்ள இராகமை என்னும் இடத்திலிருந்து நீர்கொழும்பு, சிலாபம் ஊடாகப் புத்தளத்தை அடைகின்றது.
குறுகிய பாதை(2 அடி 6 அங்)
இந்த குறுகிய பாதை புகையிரதம் இங்கிலாந்தின் கம்பனியொன்றால் தென்னாபிரிக்காவுக்காக முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தென்னாபிரிக்கா தனது தேவைகளுக்கு அது உகந்ததல்ல எனக் காரணங்காட்டி அதனை வாங்க மறுத்துவிட்டது. அக்கம்பனி உரிமையாளரின் சகோதரர் அப்போது இலங்கையில் ஆளுனராக இருந்தார். கம்பனியை வங்குரோத்திலிருந்து காப்பாற்ற இலங்கை கவர்னர் தனது சகோதரருக்கு அபயமளிக்க முன்வந்தார். அதனை இலங்கைக்கு கொண்டுவர அனுமதித்தார். அப்படியான வேண்டாப் பொருளாக இலங்கைக்கு வந்ததுதான் இந்த குறுகிய பாதைப் புகையிரதம்.2 அடி 6 அங்குலம் அகலமான இப்பாதையில் மட்டுப்படுத்தப்பட்ட இலகுரக புகையிரதங்களே செல்லும். இது அப்போது மட்டுமல்ல இன்றும் ஒரு வேண்டாத விருந்தாளியாகவே கருதப்படுகிறது
முதலாவது குறுகிய ரயில் பாதை(களனிப்பள்ளத்தக்குப் பாதை) 1900 ஆம் ஆண்டில் மருதானையிலிருந்து அவிசாவளை,எட்டியாந்தோட்டை வரை அமைக்கப்பட்டது. இந்தப் புகையிரதப் பாதை பின்னர் சப்ரகமூவாப் பாதையாக 1912 இல் இரத்தினபுரிவரையும் 1919 ல் ஒப்பநாயக்க வரையும் நீட்டிக்கப்பட்டது. பின்னர் 1970ல் இரத்தினபுரிக்கான சேவை அவிசாவளை வரை மட்டுப்படுத்தப்பட்டது. பாதை அகற்றப்பட்டு 1997இல் இப்பாதை அகலமக்கப்பட்டது. அவிசாவளையிலிருந்து எட்டியாந்தோட்டை, நானு ஓயாவிலிருந்து நுவரெலியா ஊடாக இராகலை வரையான குறுகிய பாதைகள் கைவிடப்பட்டு விட்டன.
ஆங்கிலேயரால் திட்டமிடப்பட்ட பிற பாதைகள்
மாத்தறையிலிருந்து தங்காலை,அம்பாந்தோட்டை ஊடக திச்சமஹாராமை , பண்டாரவளையிலிருந்து பசறை, தெஹிவளையிலிருந்து ஹொரனை வரைக்குமான பாதைகள் திட்டமிடப்பட்டாலும் கட்டுமான வேலைகள் நிதிப் பற்றாக்குறையால் கைவிடப்பட்டன.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads