இலித்தியம் சல்பைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலித்தியம் சல்பைடு (Lithium sulfide) என்பது Li2S. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியல் சேர்மமாகும். புளோரைட்டு எதிர் நோக்குருவில் இது படிமகாகிறது என்றும் (Li+)2S2−. அயனிகளால் ஆனதொரு உப்பு என்றும் இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது. மஞ்சள் நிறத் திண்மமாகவும் வெண்மை நிறத்தில் நீர் உறிஞ்சும் துகளாகவும் இது உருவாகிறது. காற்றில் எளிதாகச் சிதைவடைந்து அழுகிய முட்டையின் நாற்றம் கொண்ட ஐதரசன் சல்பைடை வெளியிடுகிறது.[2]
Remove ads
தயாரிப்பு
நீரற்ற அமோனியா சூழலில்[3] இலித்தியத்துடன் கந்தகத்தை[4] சேர்த்து வினைப்படுத்துவதால் இலித்தியம் சல்பைடு உருவாகிறது.
- 2 Li + S → Li2S
நான்கைதரோபியூரானில்கரையக்கூடிய இலித்தியம் சல்பைடின் மூவெத்தில்போரேன் கூட்டுவிளைபொருளை மீஐதரைட்டு கொண்டு தயாரிக்க முடியும்.[5]
பயன்கள்
இலித்தியம் சல்பைடை, இலித்தியம் – கந்தகம் மின்கலன்களில் பயன்படுத்த இயலும்.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads