ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி (Erode Sengunthar Engineering College) இந்தியாவின் தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், துடுப்பதியில் செயல்படும் ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். இது பெருந்துறையிலிருந்து (வழி: காஞ்சிக்கோயில், கவுந்தப்பாடி) 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

விரைவான உண்மைகள் குறிக்கோள், நிறுவப்பட்டது ...
Remove ads

துவக்கம்

இந்தக் கல்லூரி 1996-இல் ஈரோடு செங்குந்தர் கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது.[2] இக்கல்லூரி ஐஎஸ்ஓ 9001: 2008 சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும் இது தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்றுள்ளது.[3][4] இந்த கல்லூரி பெங்களூரு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் 'ஏ' தரச்சான்றை பெற்றுள்ளது.

துறைகள் மற்றும் படிப்புகள்

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை

  • பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (நான்கு ஆண்டுகள்)
  • எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (இரண்டு ஆண்டுகள்)
  • எம்.எஸ்.சி. கணினி அறிவியல்

இயந்திரப் பொறியியல் துறை

  • பி.இ. இயந்திரப் பொறியியல் (நான்கு ஆண்டுகள்)
  • பி.இ. இயந்திரப் பொறியியல் (நான்கு ஆண்டுகள்) - தமிழ் வழி[5]
  • எம்.இ. உற்பத்திப் பொறியியல் (இரண்டு ஆண்டுகள்)

மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை

  • பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல் (நான்கு ஆண்டுகள்)

மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை

  • பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல் (நான்கு ஆண்டுகள்)

மின்னணுவியல் மற்றும் கருவிப் பொறியியல் துறை

  • பி.இ. மின்னணுவியல் மற்றும் கருவிப் பொறியியல் (நான்கு ஆண்டுகள்)

கட்டிடப் பொறியியல் துறை

  • பி.இ. கட்டிடப் பொறியியல்

வேதியியல் பொறியியல் துறை

  • பி.டெக். வேதியியல் பொறியியல் (நான்கு ஆண்டுகள்)

வணிக மேலாண்மைத் துறை

  • எம்.பி.ஏ. (முதுநிலை வணிக மேலாண்மை)

கணினி பயன்பாடுகள் துறை

  • எம்.சி.ஏ. (முதுநிலை கணினி பயன்பாடுகள்) (மூன்று ஆண்டுகள்).
Remove ads

வசதிகள்

நூலகம்

இக்கல்லூரியில் 30,000 தொகுதிகள், 8,600 தலைப்புகள், 148 இந்திய இதழ்கள் மற்றும் 93 பன்னாட்டு பத்திரிகைகள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கூட்டமைப்பின் 801 இணைய இதழ்களைக் கொண்ட ஒரு மைய நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் 1,800க்கும் மேற்பட்ட குறுந்தகடுகள் மற்றும் நெகிழ்வட்டுகளின் தொகுப்பும் உள்ளது. பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு, வெளிநாட்டு மொழியாக ஆங்கிலத் தேர்வு, ஜி.ஆர்.இ, மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு, இராணுவ சேவை, இந்தியக் குடியியல் பணிகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான புத்தகங்கள் குறிப்பு, வெளியீடுகள் உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads