ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணம் (United Provinces of Agra and Oudh), பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ஆக்ரா மாகாணம் மற்றும் அயோத்தி பிரதேசங்களைக் கொண்டு இம்மாகாணம் 1902 முதல் 1937 முடிய செயல்பட்டது. பின்னர் ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணத்தை 1937ல் புதிதாக நிறுவப்பட்ட ஐக்கிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[1]
அயோத்தி மற்றும் ஆக்ரா மாகாணங்களை ஒன்றிணைத்து ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணம் 1902ல் உருவாக்கப்பட்டது. ஐக்கிய மாகாணத்தின் தலைநகராக அலகாபாத் நகரம் விளங்கியது. [2] [3]
Remove ads
புவியியல்
1,07,164 சதுர மைல் பரப்பளவு கொண்ட ஆக்ரா & அயோத்தி ஐக்கிய மாகாணத்தின் வடக்கில் திபெத், வடகிழக்கில் நேபாளம், கிழக்கில் பிகார், தெற்கில் தற்கால மத்தியப் பிரதேசமும், மேற்கில் பஞ்சாப் மாகாணமும் எல்லைகளாகக் கொண்டது. [4]இம்மாகாணத்தில் வற்றாத கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகள் பாய்கிறது.
நிர்வாகக் கோட்டங்கள்
பிரித்தானியாவின் இந்திய அரசு ஆக்ரா & அயோத்தி ஐக்கிய மாகாணத்தை நிர்வகிக்க, ஐக்கிய மாகாணத்தை 9 வருவாய் கோட்டங்களாகவும், 48 மாவட்டங்களாகவும் பிரித்தனர்.[5]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads