ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐசிசி இருபது20 உலகக்கிண்ணம் (ICC T20 World Cup) என்பது பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) நடத்தும் இந்தத் தொடரில் தற்போது 16 அணிகள் பங்கேற்றுள்ளன, இதில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவில் தரவரிசையில் இருக்கும் முதல் பத்து அணிகளும், இருபது20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆறு அணிகளும் அடங்கும். அனைத்து போட்டிகளும் இருபது20 வகையில் விளையாடப்படுகின்றன.
இந்நிகழ்வு பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். எனினும் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருந்த தொடரைக் கைவிடுவதாக ஐசிசி அறிவித்தது. தற்போது 4 ஆண்டுகள் கழித்த பிறகு 2020ஆம் ஆண்டு இருபது20 உலக்கிண்ணத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற 6 தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 முறையும் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் வென்று உலக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.
Remove ads
முடிவுகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads