ஒசூர் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒசூர் தொடருந்து நிலையம் (Hosur railway station, நிலையக் குறியீடு:HSRA) இந்தியாவின், தமிழகத்தின், ஒசூர் மாநகரத்தில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்மேற்கு தொடருந்து மண்டலத்தின் அங்கமான பெங்களூர் மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. சேலம் - பெங்களூரு பாதை 1913-இல் போடப்பட்டது, 1941-இல் இப்பாதை மூடப்பட்டது. மீண்டும் 28 ஆண்டுகள் கழித்து பெங்களூர் - சேலம் தொடர்வண்டி பாதை மீட்டர் கேஜ் பாதையாக போடப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது. 1996-இல் இப்பாதை அகலப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.[1] இதன் பிறகு 2017-18 ஆண்டில் ஒசூர் -பெங்களுர், தருமபுரி இடையே மின்சார தொடருந்து இயக்குவதற்காக மின்மயமாக்கும் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் ஒசூர் -பெங்களுர் வரையிலான மின்மயமாக்கப்பணிகள் 2020 ஆண்டின் இறுதியில் முழுமையடைந்தது.[2] இதனையடுத்து 2020 திசம்பர் 6 அன்று ஒசூர் - பெங்களுர் பயணிகளுக்கான முதல் மின்சார தொடருந்து பயணம் தொடங்கியது.[3]
Remove ads
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [4][5][6][7][8][9][10]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் பெங்களூர் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஒசூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 22.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[11][12][13][14]
Remove ads
வசதிகள்
இந்த ரயில் நிலையத்தில் கீழ்கண்ட வசதிகள் உள்ளன.
- கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
- புத்தக விற்பனை நிலையம்
- ஐ. ஆர். சி. டி. சி தேனீரகம்
- ஆவின் பாலகம்
- பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி
- ரயில் இருப்பிடங்காட்டி/ ஓடும் நிலை அறியும் சேவை
- ஒலிபெருக்கி அறிவிப்பு சேவை
போக்குவரத்து
இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் தொடர்வண்டிகள் [15]
விரைவுத் தொடருந்து
பயணியர் தொடருந்து
சான்றுகள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads