ஒசூர் மாநகராட்சி

தமிழகத்தின் 21 மாநகராட்சிகளில், பதிமூன்றாவது மாநகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஒசூர் மாநகராட்சி (Hosur City Municipal Corporation) இந்தியாவின் தெற்கில் உள்ள தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகராட்சி ஆகும். ஒசூர் நகராட்சி பிப்ரவரி 13,2019-ஆம் ஆண்டு 13-ஆவது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஒசூர் மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 102.41 கோடி ரூபாய் ஆகும். இம்மாநகராட்சி மத்திகிரி பேரூராட்சி, ஆவலப்பள்ளி, சென்னத்தூர், மூக்கண்டப்பள்ளி, சுசுவாடி ஆகிய ஊராட்சிகளை இணைத்து 45 வார்டுகளையும் நான்கு மண்டலங்களையும் கொண்டுள்ளது. தமிழகத்தின் மாவட்ட தலைநகர் அல்லாத முதல் மாநகராட்சி என்கிற பெருமை ஒசூர் மாநகராட்சியையே சேரும். பிப்ரவரி 2022-இல் மாநகராட்சிக்கான முதல் தேர்தல் நடைபெற்றது.[1]

விரைவான உண்மைகள் ஒசூர் மாநகராட்சி, வகை ...
Remove ads

மாநகராட்சி வடிவமைப்பு

ஒசூர் மாநகராட்சி மாமன்றம் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்றத்தலைவர் (மேயர்), மாமன்றத் துணைத்தலைவர் (துணை மேயர்), மாமன்றச் செயலாளராக மாநகராட்சி ஆணையாளரைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், மாமன்றத்தலைவர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, குறைந்தது மாதத்திற்கு ஒரு முறை மாமன்றக் கூட்டம் கூட்டப்படுகின்றது. இம்மாநகராட்சியினுடைய மாமன்றக் கூட்டம் நடத்தப்படும் நாளில், மொத்தமுள்ள 45 வார்டு உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் (30) வருகை தந்தால் மட்டுமே கூட்டம் நடத்திட முடியும். குறைவான உறுப்பினர்கள் வருகை தந்தால், கூட்டம் மற்றொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்படும். இம்மன்றக் கூட்டத்தில் மாநகருக்குச் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள், தேவைகள் மற்றும் சில செயல்பாடுகள் தீர்மானங்களாகக் கொண்டு வரப்படுகின்றன. பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஏற்பின் அடிப்படையில் அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அப்பணிகள், செயல்பாடுகள் அனைத்தும் மாநகராட்சி ஆணையாளர் வழியாகச் செயல்படுத்தப்படுகின்றன.

Remove ads

ஒசூர் மாநகராட்சி

மேலதிகத் தகவல்கள் பரப்பளவு, மக்கள் தொகை ...
Remove ads

ஒசூர் உள்ளாட்சி அமைப்பின் வரலாறு

தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்த ஒசூர், 1992 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. 1998 இல் தேர்வு நிலை நகராட்சியானது. 2011 ஆண்டு மத்திகிரி பேரூராட்சி, சூசூவாடி, மூக்கண்டபள்ளி, ஆவலப்பள்ளி, சென்னத்தூர் ஆகிய ஊராட்சிகள் ஒசூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[2] 2019 பெப்ரவரி மாதம் அச்செட்டிபள்ளி ஊராட்சி, பேகேபள்ளி ஊராட்சி, சென்னசந்திரம் ஊராட்சி, கொத்தகொண்டபள்ளி ஊராட்சி, ஒன்னல்வாடி ஊராட்சி, நல்லூர் ஊராட்சி, தொரபள்ளி அக்ரஹாரம் ஊராட்சி, பேரண்டப்பள்ளி ஊராட்சி உள்ளிட்ட எட்டு ஊராட்சிகள் ஒசூருடன் இணைக்கப்பட்டு, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனைமூலம் ஒசூர் மாநகரின் பரப்பளவானது 200 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்கு விரிவடைந்தது.[3]

ஒசூர் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (HMCC)

ஒசூர் மாநகரை நிர்வகிக்க ஒசூர் பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒசூர் மாநகரின் குடிநீர், சுகாதாரம், கல்வி, பொது சேவைகள், பொது சொத்துக்கள் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாகும். இந்த குழுமம் பெருநகரங்களில் மட்டுமே அமைக்கப்படும். அதனடிப்படையில் தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி, ஓசூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் மாநகராட்சியிலும் உள்ளது. இந்த அமைப்பு சேலம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சிகளிலும் கொண்டு வர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Remove ads

மாநகராட்சி உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆணையர், மேயர் ...

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads