ஒர்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒர்து (Ordu) (துருக்கிய உச்சரிப்பு: [ˈoɾdu]) துருக்கி நாட்டின் கருங்கடல் கடற்கரையோரம் இருக்கும் ஒரு துறைமுக நகரமாகும். ஒர்து மாகாணத்தின் தலைநகரமான இந்நகரின் 2014 ஆம் ஆண்டின் மக்கள் தொகை 195,817 ஆகும்.
Remove ads
வரலாறு
கி.மு. எட்டாம் நூற்றாண்டில் காட்யோரா ஒப்பந்தத்தின் (கோட்யோரா என்றும் அழைக்கப்படுகிறது) போது இந்நகரம் உருவாக்கப்பட்டது. கருங்கடல் கடற்கரையோ ரம் மைல்டியர்களால் உருவாக்கப்பட்ட காலணி வரிசையில் இதுவும் ஒன்றாகும். இசுட்ராபோ குறிப்பிட்டுள்ளபடி வரலாற்று அறிஞர் செனோபோனும் பின்னர் அர்ரியன் என்ற வரலாற்று அறிஞரும் ஒர்து ஒரு மிகப்பெரிய நகரம் அல்ல அது ஒரு கிராமம் என்று குறிப்பிடுகின்றனர்.[1]
இப்பகுதி தானிசுமென்சு வம்சத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் 1214 மற்றும் 1228 ஆம் ஆண்டுகளில் செல்யக் துருக்கியரிடமும் மற்றும் 1346 இல் அசிமிரொகுலாரி பிரதேசத்தின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. 1461 ஆம் ஆண்டில் திராப்சன் பேரரசு மற்றும் உதுமானியப் பேரரசு கட்டுப்பாட்டிலும் இருந்தது.[2]
ஒர்து நகருக்கு மேற்கில் 5 கிலோ மீட்டர் தொலைவில் , எசுக்கிபசாருக்கு அருகிலுள்ள பேராம்லியில், ஒரு இராணுவ புறக்காவலாக உதுமானியர்களால் நவீன நகரம் உருவாக்கப்பட்டது.
1869 இல் இந்நவீன நகருக்கு ஒர்து என பெயர் மாற்றப்பட்டது பொலாமான், பெர்செம்பே, உலுபே, அன்சமானா மற்றும் அய்பாசுதி மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 இல் ஒர்து மாகாணம் உருவக்கப்பட்டது.[3]
Remove ads
இன்றைய ஒர்து


சக்ரா தொழிற்சாலைக் கடையில் விற்பனை செய்யப்படும் அசெல்கொட்டைகள் உள்வைத்து தயாரிக்கப்பட்ட பல்வகையான சாக்லேட்டுகள் இந்நகரின் சிறப்புகளில் ஒன்றாகும்.
போசுடெப் மலையுச்சியை இணைக்கின்ற ஆகாய மின் தூக்கி (Boztepe aerial tramway ) ஒர்து நகரத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும். கெமென்சு என்ற கம்பிக்கருவி உள்ளிட்ட உள்ளூர் இசை கருங்கடல் பகுதியின் சிறப்புகளில் ஒன்றாகும்.
உணவு வகைகள் பிரதானமாக உள்ளூர் காய்கறிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது. இதில் துருக்கிய உணவு வகைகளான பைடு மற்றும் கெபாப் எனப்படும் தெற்காசிய சிறப்புணவு மற்றும் சதாரண அல்லது கேரமல் வகை பனிப்பாகு முதலியனவும் அடங்கும்.
Remove ads
பொருளாதாரம்
1920 நிலவரப்படி வெண் பச்சை அவரை உற்பத்தி செய்யும் நாடுகள் சிலவற்றுள் ஒர்து நகரமும் ஒன்றாகும். இங்கிருந்து பச்சை அவரை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது[4]. பட்டுப்புழு வளர்ப்புக்கு உதவும் மல்பரிச் செடிகள் உற்பத்தியிலும் ஒர்து நகரம் சிறந்து விளங்கியது[5]
அசெல்கொட்டை பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு ஒர்து நகரம் இன்று தாயகமாக திகழ்கிறது. துருக்கியின் மிகப்பெரிய அசெல்கொட்டை பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்யும் சக்ரா[6] தொழிற்சாலை இங்குதான் உள்ளது. பிசுகோபிர்லிக் என்ற மிகப்பெரிய அசெல்கொட்டை கூட்டுறவு அமைப்பும் இங்குதான் இருக்கிறது.[7]
விளையாட்டு
ஒர்துசுபார் என்ற கால்பந்து கழகம் ஒர்து நகரில் இருக்கிறது. நகரின் மையப் பகுதியில் உள்ள 19 எய்லுல் விளையாட்டரங்கம் இக்கழகத்திற்கான அடிப்படையாகும். இக்கழகத்தின் ஒரு பகுதியாக கூடைப்பந்தாட்டமும் விளையாடப்படுகிறது. ஒர்துசுபார் கால்பந்தாட்ட அணி துருக்கியின் கால்பந்தாட்டக் கூட்டமைப்புப் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது.
காலநிலை
பெருங்கடல் / ஈரப்பத மிதவெப்ப மண்டல எல்லைக்கோட்டு காலநிலையில் ஒர்து நகரம் உள்ளது. (கோப்பெனின் தட்பவெப்பநிலை வகை: CFB / CFA), பெரும்பாலான துருக்கியின் கிழக்கு கருங்கடல் கடற்கரைப் பகுதிகள் போல ஒர்திலும் சூடான மற்றும் ஈரப்பதமான கோடைகாலமும், குளிரும் ஈரப்பதமும் நிறைந்த குளிர்காலமும் கொண்ட காலநிலை நிலவுகிறது. ஆண்டு முழுவதும் அதிக மற்றும் பரவலான மழிப்பொழிவு ஒர்தில் காணப்படுகிறது. இலையுதிர் காலம் மற்றும் வசந்த காலத்தில் அதிகமான மழைப்பொழிவும் இங்கு பதிவாகிறது. குளிர்காலம் சூடான மற்றும் ஈரப்பதமான கோடை, மிகவும் குளிர் மற்றும் ஈரமான போன்ற. Ordu ஆண்டு முழுவதும் ஒரு உயர் மற்றும் சமமாக மழை உள்ளது. நடப்பு இலையுதிர் மற்றும் வசந்த மிக அதிகமான உள்ளது.
திசம்பர் மற்றும் மார்ச்சு மாதங்களில் இங்கு பனிப்பொழிவு சாதாரணமாக காணப்படுகிறது. பனிப்பொழிவு ஆரம்பித்த ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் பனி அதிகமாக பொழியத் தொடங்குகிறது.
துருக்கியின் மற்ற கருங்கடல் கடற்கரை நாடுகள் போல ஒர்திலும் ஆண்டு முழுவதிலும் தண்ணீரின் வெப்பநிலை எப்போதும் குளிச்சியாகவும் 8 முதல் 20° செ வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகளுடனும் இருக்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads