கதாசுருதி உபநிடதம்
ஆன்மீகம், துறவற வாழ்க்கை, மறுப்பு பற்றிய ஒரு இந்து சமய உரை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதாசுருதி உபநிடதம் ( Kathashruti Upanishad) என்பது இந்து சமயத்தின் ஒரு சிறிய உபநிடதம் ஆகும். [2] சமசுகிருத உரையான இது 20 சந்நியாச உபநிடதங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[3]மேலும், யசுர்வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [4]
துறவு பற்றிக் கூறும் இந்த பண்டைய உரை இந்து சமயத் துறவிகளின் வாழ்க்கை முறையை விவரிக்கிறது.[5][6]ஒரு சன்னியாசி என்பவர் ஆன்மாவைப் பற்றி சிந்திக்க வேண்டும், எந்த உடைமையும் இல்லாமல் எளிமையான வாழ்க்கையை நடத்த வேண்டும், எல்லா உயிர்களிடமும் இரக்கத்துடன் இருக்க வேண்டும், யாரேனும் தன்னைப் புகழ்ந்தால் மகிழ்ச்சியடையக்கூடாது, யாரேனும் தன்னைத் துன்புறுத்தும்போது சபிக்கக்கூடாது.[7][8]
Remove ads
வரலாறு
பெரும்பாலான பண்டைய இந்திய நூல்களைப் போலவே இந்த உபநிடதத்தின் இயற்றப்பட்ட காலமும் தெளிவாக இல்லை.[9] உரை குறிப்புகள் மற்றும் இலக்கிய பாணி இந்த இந்து உரை பழமையானது என்று கூறுகிறது. அநேகமாக பொதுவான சகாப்தம் தொடங்கிய நூற்றாண்டுகளில் இது இயற்றப்பட்டிருக்கலாம்.[9] இந்த உரை ஆசிரம உபநிடதத்திற்கு முன்பே இயற்றப்பட்டிருக்கலாம். இது கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. [9] இது, மிகவும் பழமையான வேத உரையான மானவ-சிரௌத்த சூத்ரத்தின் பிரிவுகளில் மிகவும் ஒத்திருக்கிறது என்று ஜெர்மனியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் இசுப்ரோக்காப் கூறுகிறார். அதாவது உபநிடதத்திற்கு வரலாற்றுக்கு முற்பட்டது. மேலும், பொ.ச.மு 1 ஆம் மில்லினியத்தின் முந்தைய நூற்றாண்டுகளில் இருந்த மரபுகளின் தொகுப்பாக இருக்கலாம். [10] சைவ சமயம் மற்றும் நிகழ்வுகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஒப்பீட்டு மதத்தின் பிரித்தானிய அறிஞர் கவின் பிளட், இது போன்ற சந்நியாச உபநிடதங்கள் பொதுவான சகாப்தத்தின் முதல் சில நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்று குறிப்பிடுகிறார்.[11]
Remove ads
கையெழுத்துப் பிரதி
இதன் சமசுகிருத கையெழுத்துப் பிரதி 1978 இல் இராமநாதன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் இந்த மொழிபெயர்ப்பு "மிகவும் மோசமானது மற்றும் துல்லியமற்றது" என்று மதிப்பாய்வு செய்யப்பட்டது.[12] இரண்டு கூடுதல் மொழிபெயர்ப்புகளை 1990 இல் இசுப்ரோக்காப் வெளியிட்டார்.[13] பின்னர், 1992 இல் ஆலிவெல் என்பவர் வெளியிட்டார்.[1]
இந்த உரை சில நேரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் கந்தசுருதி உபநிடதம் என்றும்,[14] தெற்கு [15] இந்திய கையெழுத்துப் பதிப்புகளில் கதாருத்ர உபநிடதம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.[16][17] கந்தசுருதி என்பதே கதாசுருதி என மருவியிருக்கலாம் என மாக்ஸ் முல்லர் கருதுகிறார். [18] அனுமனுக்கு இராமனால் விவரிக்கப்பட்ட முக்திகா நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இது எண் 83 இல் பட்டியலிடப்பட்டுள்ளது.[19] வட இந்தியாவில் பிரபலமான 52 உபநிடதங்களின் கோல்ப்ரூக்கின் பதிப்பில், இது எண் 26 இல் பட்டியலிடப்பட்டுள்ளது.[20] நாராயண புராணம் இந்த உபநிடதத்தை பிப்லியோதிகா இண்டிகாவில் 26 வது இடத்தில் கொண்டுள்ளது.[21]
Remove ads
உள்ளடக்கம்
இந்த உரை துறவின் கருப்பொருளையும், ஆசிரமக் கலாச்சாரத்தில் சந்நியாசியாக துறவு பாதையைத் தேர்ந்தெடுத்த ஒருவரின் வாழ்க்கையின் விளக்கத்தையும் வழங்குகிறது.[5][22][23] துறப்பவர், பரிந்துரைக்கப்பட்ட முறையைப் பின்பற்றி, பரிந்துரைக்கப்பட்ட சடங்குகளைச் செய்தபின், துறந்தவராக மாறுகிறார். துறப்பதற்காக அவரது தாய், தந்தை, மனைவி, பிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் மகிழ்ச்சியான ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உபநிடதம் தொடங்குகிறது. பின்னர் அவரது சொத்தை அவர் விரும்பும் விதத்தில் விநியோகிக்கவும், அவரது மேல் முடியை துண்டிக்கவும், அனைத்து உடைமைகளையும் நிராகரிக்கவும், அவற்றை என்றென்றும் விட்டுவிடவும் கூறுகிறது.[24] அவர் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளும்போது "நானே பிரம்மன், நானே தியாகம்,நானே பிரபஞ்சம்" என சந்நியாசி நினைத்துக் கொள்ளவேண்டும்.[25]
சந்நியாசியானவர், ஆன்மாவைப்பற்றி சிந்தித்து, அறிவைத் தொடர வேண்டும். எந்த உடைமையும் இல்லாமல் எளிமையான வாழ்க்கையை நடத்த வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் இரக்கத்துடன் இருக்க வேண்டும். யாரேனும் தன்னைப் புகழ்ந்தால் மகிழ்ச்சியடையக்கூடாது. யாரேனும் தன்னை அவமதித்தால் சபிக்கக்கூடாது. [26][27] ஒரு இந்துத் துறவி, கதாசுருதியின் படி, தவமோனி, எவருடனும் பிணைக்கப்படமாட்டார். அவர் மௌனம், தியானம் மற்றும் யோகப் பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.[28] கூடுதலாக "கோபம், ஆசை, வஞ்சகம், பெருமை, பொறாமை, மோகம், பொய், பேராசை, இன்பம், துன்பம்" ஆகியவற்றையும் கடக்க வேண்டும் என இந்த உபநிடதம் கூறுகிறது.[28]
"யார் சரியான முறையில் துறக்க முடியும்" என்பதில் ஜபால உபநிஷத்தின் கருத்துக்கு நேர்மாறான கருத்தை இந்த உபநிடதம் வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது. [29] ஒந்த உபநிடதத்தின் வசனங்கள் 31-38 இல், வாழ்க்கையின் நான்கு நிலைகள் வரிசையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது, ஒரு மனிதன் முதலில் மாணவனாக வேதக் கல்வியைக் கற்க வேண்டும், அதன் பிறகு அவன் திருமணம் செய்து, குடும்பத்தை வளர்க்க வேண்டும். அவனது குடும்பத்தை நன்முறையில் பாதுக்காக வேண்டும். பின்னர் தனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் பெரியவர்களின் சம்மதத்தைப் பெற்ற பிறகு துறக்க வேண்டும்.[30] இதற்கு நேர்மாறாக, அதே சகாப்தத்தின் மற்றொரு பண்டைய இந்து நூலான ஜபால உபநிடதம், வரிசையான படிகளை முதலில் ஒப்புக்கொள்கிறது. ஆனால் அதன்பிறகு, கல்விக்குப் பிறகு, திருமணமானவராக இருந்தாலும் சரி, திருமணமாகாதவராக இருந்தாலும் சரி, வாழ்க்கையின் எந்த நிலையிலும் அல்லது அவர் விரும்பும் நேரத்தில், அவர் உலகத்திலிருந்து பிரிந்ததாக உணர்ந்தால் எவரும் துறவு மேற்கொள்ளலாம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.[31] ஜபால உபநிடதம் துறவு மேற்கொள்பவர் தனது முடிவை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு முன்கூட்டியே தெரிவிக்கவும், வற்புறுத்தவும் பரிந்துரைக்கிறது.[30] [31]
Remove ads
இதனையும் பார்க்கவும்
சான்றுகள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads