கனேந்திரநாத் தாகூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கனேந்திரநாத் தாகூர் (Ganendranath Tagore) இவர் ஓர் இந்திய இசைக்கலைஞரும் மற்றும் நாடக ஆளுமையுமாவார். மேலும் இவர், தேசியவாத சொற்பொழிவுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கினார். கொல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்களில் ஒருவரான இவர் இந்து மேளாவின் நிறுவனர்-செயலாளராக இருந்தார். [1]

விரைவான உண்மைகள் கனேந்திரநாத் தாகூர், பிறப்பு ...
Remove ads

குடும்பம்

தாகூர் குடும்பத்தின் ஜோராசங்கோ கிளையின் நிறுவனர் துவாரகநாத் தாகூருக்கு, இறக்கும் போது தேபேந்திரநாத், கிரிந்திரநாத் மற்றும் நாகேந்திரநாத் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். கிரிந்திரநாத் மற்றும் நாகேந்திரநாத் இருவரும் தன்களது சிறுவயதிலேயே இறந்து போயினர். நாகேந்திரநாத்துக்கு குழந்தைகள் இல்லை.[2] கனேந்திரநாத் கிரிந்திராந்த் மற்றும் ஜோகமாயா தேவியின் மூத்த மகனாவார். இவரது தம்பி குனேந்திரநாத். கனேந்திரநாத்துக்கும் குழந்தைகள் இல்லை. குனேந்திரநாத்திற்கு கங்காதரநாத், சமரேந்திரநாத், அபனிந்திரநாத், பினயாணி தேவி மற்றும் சுனயாணி தேவி ஆகிய குழந்தைகள் இருந்தனர்.[3]

ஜோராசங்கோ தாக்கூர் மாளிகையின் "பைதக்கனா மாளிகை" என்று அழைக்கப்படும் இடத்தில் இவர்கள் வாழ்ந்தனர். அதன் பின்னர் அந்த பகுதி இடிக்கப்பட்டது.[4] இவர் திவிஜேந்திரநாத்துக்கு இளையவர், ஆனால் சத்யேந்திரநாத்துக்கு மூத்தவர் என்பதால் கூட்டுக் குடும்பத்தில் ‘மெஜாதாதா’ (இரண்டாவது அண்ணன்) என்று அழைக்கப்பட்டார் .[5]

Remove ads

உருவான ஆண்டுகள்

இவர் இந்துப் பள்ளி மாணவராக இருந்தார். 1857இல் கொல்கத்தா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியபோது, இவரும் சத்யேந்திரநாத்தும் முதல் பிரிவில் தேர்ச்சி பெற்றனர். [6]

ஒரு தீவிர எழுத்தாளரான கனேந்திரநாத் காளிதாசரின் விக்ரமர்வசியம் என்பதை1869இல் வங்காள மொழியில் மொழிபெயர்த்தார். இவர் பிரம்ம சங்கீதம் என்று அழைக்கப்படும் பக்தி பாடல்களையும், தேசபக்தி மிகுந்த பாடல்களையும் இயற்றினார். [6] சுபினாய் ராய் பாடி, 2007 இல் வெளிவந்த பாடல்களைக் கொண்ட ஒரு பிரம்ம இசைத் வெளியீட்டில் இவரது "காவ் ஹே தாஹாரி நாம்" (ஓ! அவரது பெயரைப் பாடுங்கள்) என்ற தலைப்பில் ஒரு பாடல் உள்ளது.[7] அதே பிரம்ம சங்கீதத்தில் தேவப்பிரதா பிஸ்வாஸ் பாடிய 2018 இல் வெளியிடப்பட்ட இசைத் தொகுப்பிலும் இடம் பெற்றது.

Remove ads

ஜோரசங்கோ நாட்டியசாலை

கனேந்திரநாத் நாடகங்களின் மீது மிகுந்த ஈர்ப்பைக் கொண்டிருந்தார். 1865 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ஜோராசங்கோ நாட்டியசாலை என்ற தனி நாடக அரங்கத்தை நிறுவி, அந்த ஆண்டிலேயே மைக்கேல் மதுசூதன் தத்தா எழுதிய கிருட்டிணகுமாரி என்ற நாடகத்தை அரங்கேற்றினார். இளம் ஜோதிரிந்திரனாத்திற்கு அகல்யாதேவி பாத்திரத்தில் நடிக்க முதல் வாய்ப்பு கிடைத்தது.[5] முதலில் ஆண்கள் பெண் வேடங்களில் நடித்தனர். ஆனால் பின்னர் குடும்பத்தின் பெண்களும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு முன்னால் நடித்தனர்.[8]

வங்காள மொழியில் சில நல்ல நாடகங்கள் இருந்ததால், அவற்றை அரங்கேற்றுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. சமூக கருப்பொருள்களில் நாடகங்களை எழுதியதற்காக கனேந்திரநாத் ஒரு பரிசை அறிவித்தார். இராம்நாராயணன் தர்கரத்னா என்பவர் தான் எழுதிய நபநாதக் என்ற நாடகத்திற்காக முதல் பரிசை வென்றார். நாடக ஆசிரியருக்கு ரூ.200ம் மற்றும் நாடகத்தின் ஆயிரம் பிரதிகள் அச்சிடும் செலவையும் ஏறுக்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது. [6][9] சாரதா பிரசாத் கங்குலி, அக்‌சய் மசும்தர், ஜோதிரிந்திரநாத் தாகூர் மற்றும் பலர் நாடங்களில் நடித்தார்கள்.[10]

இந்து மேளா

கனேந்திரநாத் 1867 இல் திவிஜேந்திரநாத் தாகூர், ராஜ்நாராயண் பாசு மற்றும் நவகோபால் மித்ரா ஆகியோருடன் இந்து மேளாவை நிறுவினார். இவர் இந்த அமைப்பின் நிறுவனர்-செயலாளராக இருந்தார். இது தேசபக்தியையும் உள்நாட்டுத் தொழிலையும் ஊக்குவிக்க முயன்றது. தொடக்க அமர்வில் பேசிய இவர், “இந்த கூட்டம் சாதாரண மத நடவடிக்கைகளுக்காக அல்ல, எந்தவொரு விஷயத்திலும் மகிழ்ச்சியை அடைவதற்காக அல்ல, பொழுதுபோக்குக்காக அல்ல, இது நாட்டிற்காக, தாய் நிலத்திற்கு” என்றார்.[5][6][11] மற்றொரு சந்தர்ப்பத்தில் இவர் கூறினார், "இந்தியாவின் ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால், எங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் நாங்கள் எப்போதும் பிரபுக்களை நோக்கி வருகிறோம். இது மிகவும் அவமானகரமான விஷயம். நாம் மனிதர்கள் இல்லையா? மேளாவின் நோக்கங்களில் ஒன்று, நாட்டில் சுய சார்பு உணர்வை ஊக்குவிப்பதாகும். " [12]

கனேந்திரநாத் இந்து மேளாவில் பல முறை பாடப்பட்ட ஒரு பாடலால் நற்பெயரைப் பெற்றார்: "லஜ்ஜய் பாரத்-ஜாஸ் கெய்போ கி கோரே" (இந்தியாவின் மகிமையில் நான் எவ்வாறு பாடுவேன், ஏனென்றால் நான் வெட்கத்தில் புதைக்கப்பட்டேன்).[13]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads