கம்போங் குவாந்தான் மின்மினி பூச்சி பூங்கா
மலேசியா, சிலாங்கூர் பகுதியில் ஒரு மின்மினி பூச்சி பூங்கா From Wikipedia, the free encyclopedia
Remove ads
கம்போங் குவாந்தான் மின்மினி பூச்சி பூங்கா (மலாய் Kelip-Kelip Kg. Kuantan; ஆங்கிலம்: Kampung Kuantan Fireflies Park) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு மின்மினி பூச்சி பூங்கா ஆகும். இந்தப் பூங்கா கோலாலம்பூரில் இருந்து 56 கி.மீ.; மற்றும் கோலா சிலாங்கூர் நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும்; கம்போங் குவாந்தான் கிராமப் பகுதியில் உள்ளது.
கம்போங் குவாந்தான், நெல்வயல்களும் சதுப்புநிலக் காடுகளும் நிறைந்த ஒரு சின்னக் கிராமம் ஆகும். இந்த கம்போங் குவாந்தான் மின்மினி வனப் பூங்கா தான் உலகிலேயே பெரிய வன பூங்காக்களில் ஒன்றாகவும்; பல கோடி மின்மினிப் பூச்சிகள் குடியேறிய மிகப் பெரிய மின்மினிக் குடியேற்றச் சதுப்புக் காடு எனவும் அறியப்படுகிறது.[1]
Remove ads
பொது
உலகில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே இத்தகைய மிகப் பெரிய மின்மினிகளின் குடியேற்றப் பகுதிகள் உள்ளன. இன்னோர் இடம் ஐக்கிய அமெரிக்கா, கலிபோர்னியா, சான் ஜசிந்தோ (San Jacinto) மலை அடிவாரத்தில் உள்ளது.[2] கம்போங் குவாந்தான் சதுப்புநிலக் காடுகளின் மின்மினிகளைப் பார்க்க மலேசியாவில் இருந்தும், உலகின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
மின்மினி வனப் பூங்காவைச் சுற்றிப் பார்க்க படகு வசதிகள் உள்ளன. மாலை நேரத்தில் படகுப் பயணங்கள் தொடங்குகின்றன. இரவு 10.30-க்கு மேல் பயணங்கள் இல்லை.[3] சிலாங்கூர் ஆற்றின் இரு மருங்கிலும் மின்மினிப் பூச்சிகள் ஒளிர்கின்றன. அத்துடன் இங்குள்ள பல்வகைப் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், பூச்சிகள், சில வகை மீன்கள் போன்றவை இயற்கையாகவே ஒளிரும் தன்மை கொண்டவை.
Remove ads
சிறப்புகள்
பொழுது சாயும் நேரத்தில் கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சிகள் சதுப்பு நிலக்காடுகளில் ஒன்று கூடி, மரப் பட்டைகளின் சாறுகளை உறிஞ்சுகின்றன. தங்களின் துணையை ஈர்ப்பதற்காக ஒளிர்கின்றன. ஆண் பெண் இரு இனங்களும் ஒளிரும் என்றாலும் ஆண் பூச்சிகளே அதிகமாக ஒளியை வெளியாக்குகின்றன.
ஆண் பூச்சி 5.8 விநாடிகளுக்கு ஒருமுறை ஒளியால் பெண் பூச்சிகளுக்கு சைகை அனுப்புகிறது. ஆண்பூச்சியின் சைகைக்கு 2.1 விநாடிகளுக்கு பின் பெண் பூச்சி பதில் சைகை செய்கிறது. மின்மினிப் பூச்சிகளுக்குப் பிடித்தமான உணவு சிறுசிறு நத்தைகள்; மண்புழுக்கள் ஆகும்.
Remove ads
வரலாறு
1970-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஒரு உள்ளூர் தொழிலதிபர் அந்த மின்மினிப் பூச்சிகளின் சாகசங்களைப் பத்திரிக்கைகளில் எழுதினார். சில ஆண்டுளுக்கு முன்னர் இந்த வனப்பூங்காவின் பொறுப்பு கோலா சிலாங்கூர் மாவட்ட நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் 27 சிறிய படகுகள் வாங்கப் பட்டன. அதன் பின்னர் மின்மினி வனப்பூங்கா சுற்றுலா விரிவு அடைந்து உள்ளது.[4][5]
சுற்றுப் பயணிகளுக்கான படகுகள் முற்றிலும் மின்கலத்தில் இயங்குகின்றன. மின்மினிப் பூச்சிகளின் சரணாலயத்தின் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.[6]
காட்சியகம்
கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சி பூங்கா காட்சிப் படங்கள்:
- கம்போங் குவாந்தான்
- கட்டண அறிவிப்பு
- நுழைவாயில்
- படகு துறை
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads