கோலா சிலாங்கூர் நகராட்சி

From Wikipedia, the free encyclopedia

கோலா சிலாங்கூர் நகராட்சி
Remove ads

கோலா சிலாங்கூர் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor Municipal Council); (சுருக்கம்: MPHS) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா சிலாங்கூர் மாவட்டம் (Kuala Selangor District); மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை நிர்வகிக்கும் நகராட்சி ஆகும். இந்த நகராட்சி மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[2]

விரைவான உண்மைகள் கோலா சிலாங்கூர் நகராட்சி Kuala Selangor Municipal CouncilMajlis Perbandaran Kuala Selangor, வரலாறு ...

கோலா சிலாங்கூர் நகராட்சி, சிலாங்கூர் மாநிலச் சட்டக் கையேடு 18/78 (Selangor State Law Handbill 18/78) மூலம், 1978 பிப்ரவரி 6-ஆம் தேதி உருவாக்கப்பட்டது; 119,452 எக்டேர் பரப்பளவைக் கொண்டது.[2]

Remove ads

மாவட்ட ஊராட்சிகள்

கோலா சிலாங்கூர் நகராட்சி ஐந்து கிராமப்புற மாவட்ட ஊராட்சிகளை (Local Council) கொண்டது.

  • கோலா சிலாங்கூர் ஊராட்சி (Kuala Selangor Local Council)
  • தஞ்சோங் காராங் ஊராட்சி (Tanjong Karang Local Council)
  • பத்தாங் பெர்ஜுந்தை ஊராட்சி (Batang Berjuntai Local Council)
  • ஈஜோக் ஊராட்சி (Ijok Local Council)
  • ஜெராம் ஊராட்சி (Jeram Local Council')

பொது

பொறுப்புகள்

கோலா சிலாங்கூர் மாவட்டம்

Thumb

கோலா சிலாங்கூர் மாவட்டத்திற்கு (Kuala Selangor District) வடக்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; மேற்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; & கோம்பாக் மாவட்டம்; தென் மேற்கில் பெட்டாலிங் மாவட்டம்; தெற்கில் கிள்ளான் மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன

கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: தஞ்சோங் காராங்; கோலா சிலாங்கூர். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா சிலாங்கூர்.[3]

இந்த மாவட்டத்தைக் கோலா சிலாங்கூர் பிரிவு; தஞ்சோங் காராங் பிரிவு; என இரு பிரிவுகளாக சிலாங்கூர் ஆறு பிரிக்கின்றது. சிலாங்கூர் ஆறு இந்த மாவட்டத்தை ஊடுருவிச் செல்வதால் அந்த ஆற்றின் பெயரே கோலா சிலாங்கூர் நகரத்திற்கும் மாவட்டத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.

நிர்வாகப் பகுதிகள்

கோலா சிலாங்கூர் மாவட்டம், கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.

கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்

  1. அப்பி அப்பி (Api-Api)
  2. பெஸ்தாரி ஜெயா (Bestari Jaya)
  3. உஜோங் பெர்மாத்தாங் (Hujong Permatang)
  4. உலு திங்கி (Hulu Tinggi)
  5. ஈஜோக் (Ijok)
  6. ஜெராம் (Jeram)
  7. கோலா சிலாங்கூர் (Kuala Selangor)
  8. பாசாங்கான் (Pasangan)
  9. தஞ்சோங் காராங் (Tanjung Karang)

கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

கோலா சிலாங்கூர் நகராட்சிக்கு உடபட்ட கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,676 மாணவர்கள் பயில்கிறார்கள். 221 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியாவில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் உள்ள மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.[4][5]

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads