கரிசல்பட்டி

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

கரிசல்பட்டிmap
Remove ads

கரிசல்பட்டி (KarisalPatti) , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் ஊராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

கரிசல்பட்டி கிராமம்

Thumb
மணிமுத்தாறு பிரதான கால்வாய் இடம் - கரிசல்பட்டி

அடிப்படையில் இது கிராமமாக இருப்பினும் இது சற்று நாகரிகமடைந்த வாழ்க்கை முறையை ஒத்து நகர வாழ்க்கையைப் போன்ற சூழல் கொண்ட கிராமமாகும். காரணம் கிராமத்தில் படித்தவர்களே மிக அதிகம். கிராமத்திலே ஒரு உயர் நிலைப் பள்ளி இருப்பதால் அனைவரும் குறைந்தது பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து விடுகின்றனர். மேலும் பெரும்பான்மையானவர்கள் வசதி படைத்தவர்களாக இருப்பதால் கல்லூரி படிப்பும் தொடர்கிறது.

Remove ads

வரலாறு

Thumb
கரிசல்பட்டி குளத்திற்கும் ஊருக்கும் இடைப்பட்ட பத்துகாடு (வயல்வெளி) பகுதி

கரிசல்பட்டி ஒரு பழமையான கிராமம், ஆரம்ப காலத்து கரிசல்பட்டி பிராமணர்களைக் கொண்ட கிராமமாகும். தற்போது ஊர் குளத்திற்கு தெற்கு பகுதில் உள்ள ஊரணி உள்ள இடமே பிராமணர் காலத்து கரிசல்பட்டியாகும். தற்போது அதற்கான அடையாளம் கூட இல்லாமல் இருக்கும் இவ்விடத்தில் இருந்து சுமார் இரண்டு தலைமுறைகளுக்கு முன் வீடு கட்டுவதற்காக எடுக்கப்பட்ட பெரிய அளவினால படிக்கட்டுக்கற்களே அதற்கு ஆதாரம். பின்னர் விவசாயப் பணிகளுக்காக குடியேறியவர்களே நாடார் சமுதாயத்தினர். தெற்கே பிராமணர்களும் வடக்கே நாடார்களும் வசித்து வந்த கிராமத்தில் பிராமணர்கள் நகர்ப்புறங்களுக்கு குடிபெயர ஆரம்பித்ததாலும் தீண்டாமை போன்ற பிரச்சனைகளாலும் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர். இன்று சுமார் நானூறு நாடார் இன குடும்பங்கள் வசிக்கும் இவ்வூரில் அனைவரும் கிறித்தவ நாடார்களே.

Remove ads

கிறித்தவம்

சுமார் நூற்றைம்பது அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே கிருத்தவம் கரிசல்பட்டியில் நுழைந்திருக்கவேண்டும். ஆரம்பத்தில் லண்டனை தலைமையகமாகக் கொண்டு தென்னிந்தியாவில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில்(தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் உட்பட) சுவிசேச ஊழியம் செய்து வந்த சி.எம்.எஸ்.சபையே கரிசல்பட்டிக்கு கிருத்துவத்தை கொண்டுவந்தது. சி.எம்.எஸ் ஆல் கட்டப்பட்ட தூய பவுல் ஆலயம் நூற்றுப்பத்து ஆண்டுகளையும் கடந்து கம்பீரமாய் காட்சியளிக்கிறது. இந்த சி.எம்.எஸ்-ல் சுவிசேச ஊழியம் செய்வதற்காக கரிசல்பட்டிக்கு வந்தவரே சுவி.தாவீது ஐயா அவர்கள். அறுபது ஆண்டுகளைக் கடந்து சி.எம்.எஸ் பரி.காபிரியேல் ஆலயமும், நூற்றாண்டுகளைக் கடந்து சி.எஸ்.ஐ தூய பவுல் ஆலயமும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுகிறது.

கரிசல்பட்டி ஊராட்சி

கரிசல்பட்டி ஊராட்சி, சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு சிற்றூராட்சியாகும். இது கரிசல்பட்டி மற்றும் பூங்குடையார்குளம் என்னும் இரு வருவாய் கிராமங்களையும் கரிசல்பட்டி, ஓடைக்கரை, மேல உப்பூரணி, கீழ உப்பூரணி, தெய்வநாயகப்பேரி மற்றும் கோவிந்தப்பேரி என்னும் சிற்றூர்களையும் கொண்டது. இதன் எல்கையாக திருவிருத்தான்புள்ளி, உலகங்குளம் ஊராட்சிகளும், மேலச்சேவல் பெரூராட்சியும் மற்றும் நாங்குநேரி தாலுகாவைச் சேர்ந்த சிங்கிகுளம் ஊராட்சியும் அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads