கரோலின்ஸ்கா மையம்

மருத்துவப் பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

கரோலின்ஸ்கா மையம்map
Remove ads

கரோலின்ஸ்கா மையம் (Karolinska Institutet) சுவீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோமில் உள்ளது. இது ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1810ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனமானது, உப்சாலா பல்கலைக்கழகம் (1477) மற்றும் லுண்ட் பல்கலைக்கழகத்தினை (1666) அடுத்து மூன்றாவதாக சுவீடனில் உருவாக்கப்பட்ட பழமையான மருத்துவ நிறுவனம் ஆகும். 2010ஆம் ஆண்டு, 200ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. சோல்னா மற்றும் ஹுட்டிங்கேவில் உள்ள கரோலின்சுகா பல்கலைக்கழக மருத்துவமனையானது கரோலின்சுகா மையத்துடன் இணைந்த ஆய்வு மற்றும் கற்பித்தலை முதன்மையாகக் கொண்ட மருத்துவ வளாகம் ஆகும். சுவீடனில் நடக்கும் முப்பது சதவிகித (30%) மருத்துவப்பயிற்சியும், நாற்பது சதவிகித (40%) மருத்துவ ஆய்வும் இங்குதான் நடைபெறுகிறது[2]. இந்த ஆய்வு மையம் அமைக்கும் குழுமம், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்களை தேர்ந்தெடுக்கிறது. உலக அளவில் கரோலின்சுகா நிறுவனம் பதினாறாவது சிறந்த மருத்துவப் பல்கலைக்கழகமாக உள்ளது[3].

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Thumb
கரோலின்ஸ்கா மையத்தின் கொடி
Thumb
கரோலின்ஸ்கா மையம், சோல்னா
Thumb
கரோலின்ஸ்கா மருத்துவமனை, சோல்னா
Thumb
கரோலின்ஸ்கா அரங்கம், சோல்னா வளாகம்
Thumb
பெர்சீலியுஸ் ஆய்வகம், சோல்னா வளாகம்
Thumb
கரோலின்ஸ்கா மைய நூலகம் மற்றும் பெர்சீலியுஸ் ஆய்வகம், சோல்னா வளாகம்
Thumb
பழையத் தோட்டம் (முற்றம்), சோல்னா வளாகம்
Thumb
பூர்வீக கரோலின் மையக் கட்டிடங்கள், ஸ்டாக்ஹோம்
Thumb
கரோலின்ஸ்கா மருத்துவமனை, ஹுட்டிங்கே வளாகம்
Thumb
நோவம் ஆய்வுப் பூங்கா, ஹுட்டிங்கே வளாகம்
Remove ads

ஆய்வுத்துறைகள் மற்றும் பிரிவுகள்

சோல்னா வளாகம்

  1. செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் (CMB)
  2. சுற்றுசூழல் மருத்துவம் (IMM)
  3. கற்றல், தகவலியல், நிருவாகம் மற்றும் நெறிமுறைகள் (LIME)
  4. மருத்துவ உயிர்வேதியியல் மற்றும் உயிர்இயற்பியல் (MBB)
  • உயிர்இயற்பியல்
  • உயிர்வேதியியல்
  • உடலிரசாயனவியல் - I
  • உடலிரசாயனவியல் - II
  • இரசாயன உயிரியல்
  • திசுக்கூழ் உயிரியல்
  • மருத்துவ அழற்சி ஆய்வு
  • மூலக்கூற்று உயிர்நரம்பியல்
  • மூலக்கூற்று கட்டமைப்பு உயிரியல்
  • கட்டமைப்பு மரபணுத்தொகுதி கூட்டமைப்பு
  • இரத்தநாள உயிரியல்
5. மருத்துவ நோய்ப்பரவு இயல் மற்றும் உயிரியல் புள்ளிவிவரம் (MEB)
6. நுண்ணுயிரியல், கட்டி மற்றும் செல் உயிரியல் (MTC)
  • புற்று மற்றும் கழலை உயிரியல்
  • புற்று மற்றும் உயிரிமருத்துவ சூழலியல்
  • நோய்எதிர்ப்பியல்
  • நோய்த் தொற்று அறிவியல்
7. நரம்பு அறிவியல்
8. உடலியல் மற்றும் மருந்தியல் (FyFa)
9. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்

கரோலின்சுகா மருத்துவமனை வளாகம்

  1. பிணி சார்ந்த நரம்பு அறிவியல்
  2. பிணி சார்ந்த அறிவியல், இடையீடு மற்றும் தொழில்நுட்பம் (CLINTEC)
  3. மருத்துவம், சோல்னா
  4. மூலக்கூறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
  5. கழலையியல்-நோயியல்
  6. பொதுநல அறிவியல்

ஹுட்டிங்கே வளாகம்

  1. உயிர்அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து (BioNut)
  2. அறுவை சிகிச்சை மற்றும் நடத்தை, ஹுட்டிங்கே
  3. பல் மருத்துவம் (Dentmed)
  4. ஆய்வு மருத்துவம்
  5. மருத்துவம், ஹுட்டிங்கே
  6. உயிர்நரம்பியல், பராமரிப்பு அறிவியல் மற்றும் சமூகம் (NVS)
Remove ads

கரோலின்ஸ்கா மையத்துடன் இணைந்த புகழ் பெற்றவர்கள்

Remove ads

சில படங்கள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads