கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Kalaignar Karunanidhi Institute of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனம் ஆகும். இந்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது, இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] மேலும் இது என். பி. ஏ. ஆல் அங்கீகாரம் பெற்றது மற்றும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் 'ஏ' தரத்துடன் அங்கீகாரம் பெற்றது.
கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப நிறுவனமானது 2008 ஆம் ஆண்டு கோவையில் விஜயலட்சுமி பழனிசாமி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. கல்லூரிகளில் 8 இளநிலை மற்றும் 7 முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.[2]
Remove ads
உள்கட்டமைப்புவசதிகள்
கோயமுத்தூரின் புறநகரில் அமைந்துள்ள இக்கல்லூரியானது 250 அறைகளைக் கொண்ட மாணவர் விடுதி, 15000 சதுர அடி கொண்ட விளையாட்டு அரங்கம், 15000 சதுர அடி கொண்ட சமையல் கூடம், 30 அடிக்கு 30 அடி கொண்ட 100 வகுப்பறைகள் போன்றவற்றை உடையதாக உள்ளது.[3]
வழங்கப்படும் பாடங்கள்
இளநிலை படிப்புகள்
- பி.இ - வான்வெளிப் பொறியியல்
- பி.இ - வேளாண் பொறியியல்
- பி.இ - உயிர்மருத்துவப் பொறியியல்
- பி.இ - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ - மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
- பி.இ - மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
- பி.இ - இயந்திரப் பொறியியல்
- பி.டெக் - உயிரித் தொழில்நுட்பம்
முதுநிலை படிப்புகள்
- எம்.இ - அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
- எம்.இ - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எம்.இ - பொறியியல் வடிவமைப்பு
- எம்.இ - பவர் சிஸ்டம்ஸ் பொறியியல்
- எம்.இ - விஎல்எஸ்ஐ வடிவமைப்பு
- எம்பிஏ - முதுகலை வணிக மேலாண்மை
- எம்சிஏ - கணினி செயலி
- கல்லூரியின் தோற்றம்
- விடுதி
- வகுப்பறை
- நூலகம்
- விளையாட்டு அரங்கம்
- கல்லூரியின் இரவுத் தோற்றம்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads