என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
என். பி. ஏ. (NBA) என்று பொதுவாக அழைக்கப்படும் நேஷனல் பாஸ்கெட்பால் அசோசியேஷன் (National Basketball Association), தமிழ் மொழிபெயர்ப்பு தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம், அமெரிக்காவிலும் கனடாவிலும் செயற்படும் கூடைப்பந்துச் சங்கம் ஆகும். வட அமெரிக்காவில் நான்கு மிகப்பெரிய விளையாட்டு சங்கங்களுள் ஒன்றாகும். இந்தச் சங்கத்தில் 30 அணிகள் உள்ளன.
Remove ads
வரலாறு
என்.பி.ஏ. வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற எதிரிடை லேகர்ஸ்-செல்டிக்ஸ் எதிரிடை ஆகும். மொத்தத்தில் இந்த இரண்டு அணிகல் 31 தடவை இறுதிப்போட்டிகளை வெற்றிபெற்றுள்ளன. 1960களில் பில் ரசல், பாப் கூசி இருக்கும் செல்டிக்ஸ் அணிகள் மற்றும் எல்ஜின் பெய்லர், ஜெரி வெஸ்ட் இருக்கும் லேகர்ஸ் அணிகள் ஆறு தடவை இறுதிப்போட்டிகளில் மோதி ஆறும் செல்டிக்ஸ் வெற்றிபெற்றது. 1980களில் லேகர்ஸ் அணியின் மேஜிக் ஜான்சன் மற்றும் செல்டிக்ஸ் அணியின் லாரி பர்ட் என்.பி.ஏ.இல் தலைசிறந்த வீரர்களாக இருந்தார்கள். இப்பத்தாண்டில் மூன்று இறுதிப்போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் மோதின; இதில் லேகர்ஸ் இரண்டு தடவை வெற்றிபெற்றன.
2008 பருவத்துக்கு முன் செல்டிக்ஸ் அணி சானிக்ஸ் மற்றும் டிம்பர்வுல்வ்ஸ் அணிகளுடன் வியாபாரம் செய்து தலைசிறந்த புள்ளிபெற்ற பின்காவல் ரே ஏலன் மற்றும் வலிய முன்நிலை கெவின் கார்னெட் செல்டிக்ஸ் அணியுக்கு கூட்டல் செய்தன. லேகர்ஸ் அணி நடு பருவத்தில் கிரிசிலீஸ் அணியுடன் வியாபாரம் செய்து வலிய முன்நிலை பாவ் கசோலை கூட்டல் செய்தன. இதனால் இரண்டு அணியில் ஒரு "பெரிய மூன்று" தலைசிறந்த வீரர்கள் உள்ளன—செல்டிக்ஸில் கார்னெட், ஏலன், மற்றும் பால் பியர்ஸ்; லேகர்ஸில் கசோல், கோபி பிரயன்ட் மற்றும் லமார் ஓடம்.
இதுவரை போஸ்டன்செல்டிக்ஸ் அணி அதிகமுறை (17) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது, இதற்கு அடுத்தபடியாக லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (15) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஜூன் 6, 1946 நியூயார்க் நகரில் அமெரிக்கக் கூடைப்பந்தாட்டச் சங்கம் என்று தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் அலுவலகங்கள் நியூயார்க் நகரில் அமைந்துள்ளன. 1984 முதல் இன்று வரை என்.பி.ஏ.-இன் ஆணையர் டேவிட் ஸ்டர்ன் ஆவார்.
Remove ads
அணிகள்
என்.பி.ஏ. ஆனது 1946 இல் ஆரம்பிக்கப்படும் போது 11 அணிகளைக் கொண்டிருந்தது. தற்போது 30 அணிகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 29 அணிகள் அமெரிக்காவிலும் ஒரு அணி கனடாவிலும் அமைந்துள்ளன. பாஸ்டன் செல்டிக்ஸ் அணியே 17 என்.பி.ஏ. வெற்றிகளுடன் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக விளங்குகின்றது. லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணி 11 வெற்றிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது.
கிழக்குக் கூட்டம்
மேற்கு கூட்டம்
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads