கல்யாணமாம் கல்யாணம் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்யாணமாம் கல்யாணம் என்பது விஜய் தொலைக்காட்சியில் ஜனவரி 29ஆம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, ஜூன் 18 ஆம் திகதி முதல் மதியம் 1 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். [1][2][3]
இந்த தொடரை பிரம்மா இயக்க, ஸ்ரீது, தேஜா, ஸ்ரிதிகா, மௌலி, ஆர். சுந்தர்ராஜன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[4] இந்த தொடர் பெப்ரவரி 23, 2019 அன்று 307 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்று, இதன் இரண்டாம் பாகம் அஞ்சலி என்ற பெயரில் ஒளிபரப்பானது.
Remove ads
கதைச்சுருக்கம்
இந்த தொடரின் கதை சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கமலி (ஸ்ரீது) என்ற பெண். திருமண வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கை கொண்டவள். ஆனால் பணக்கார வீட்டு குடும்பத்தைச் சேர்ந்த சூர்யாவுக்கோ (தேஜா) திருமண கல்யாண வாழ்க்கையில் துளி கூட நம்பிக்கை இல்லாதவன். சூர்யாவின் பெற்றோர்கள் இருபது வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே, தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான் சூர்யா. கமலியின் எளிமைக் குணத்தைக் கண்டு வியக்கும் சூர்யாவின் தாத்தா, அவனுக்கு கமலியைத் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார். ஆனால் அந்த திருமணம் தடை பெற்றது.
பல பிரச்சனைகளுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்கின்றனர் அனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாதா சூர்யாவின் தாய் அகிலா (ஸ்ரிதிகா) மற்றும் அத்தை நிர்மலா (ஜீவிதா) இருவரையும் பிரிக்க நினைக்கின்றனர். இவர்களின் சதியிலிருந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். கமலி கர்ப்பம் தரித்து 2 குழந்தைகளை பெற்று எடுக்கின்றார். மகன் பெயர் கார்த்திக் மகள் பெயர் அஞ்சலி, இதிலிருந்து கலயாணமாம் கல்யாணத்தின் தொடரின் 2ஆம் பாகம் ஆரம்பிக்கின்றது.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- ஸ்ரீது - கமலி (பகுதி: 1-301) (சூர்யாவின் மனைவி)
- பிராக்யா நாகரா - கமலி (பகுதி: 302-307)
- தேஜா - சூர்யா (பகுதி: 1-301) (கமலியின் கணவன்)
- சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன் - சூர்யா (பகுதி: 302-307)
- நிஹாரிகா (பகுதி: 1-68) → ஸ்ரிதிகா (பகுதி: 69-210) → சாய்லதா - அகிலா (பகுதி: 211-307) (சூர்யாவின் தாய்)
துணை கதாபாத்திரம்
- மௌலி - சிவப்பிரகாசம் (அகிலாவின் தந்தை, சூர்யாவின் தாத்தா)
- ஆர். சுந்தர்ராஜன் (கமலியின் தாத்தா)
- ஜீவா ரவி → பிரகாஷ் ராஜன்
- ஷாப்பினம் - பிரியா (டாக்டர். சந்திரசேகர், சூர்யாவின் தந்தையார்)
- சாய் பிரியங்கா - சந்தியா (சிவபிரகாசத்தின் மகள், அகிலாவின் சகோதரி)
- ஜீவிதா - நிர்மலா ஜெகதீஷ்
- ரவிக்குமார்
- பாக்கியா
- பாரதி மோகன்
- மிர்துளா ஸ்ரீ
Remove ads
நடிகர்களின் தேர்வு
இந்த தொடரில் கமலியாக விஜய் தொலைக்காட்சியில் ‘7சி’ மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மெல்லத் திறந்தது கதவு தொடர்களில் நடித்த ஸ்ரீத்து நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சூர்யா என்ற கதாபாத்திரத்தில் தேஜா என்பவர் நடித்துள்ளார். பிரபல இயக்குநர்கள் ஆர். சுந்தர்ராஜன் மற்றும் மௌலி இருவரும் இந்த சீரியலில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
முகப்பு பாடல்
இந்த தொடருக்கான முகப்பு பாடலான துள்ளி துள்ளி என்ற பாடலுக்கு என். கண்ணன் என்பவர் இசை அமைத்துள்ளார்.
நேர அட்டவணை
இந்த தொடர் ஜனவரி 29ஆம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் தமிழ்க்கடவுள் முருகன் என்ற வரலாற்று தொடருக்கு பதிலாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சிக்காக இந்த தொடர் ஜூன் 18ஆம் திகதி முதல் மதியம் 1 மணிக்கு மாற்றப்பட்டது. 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பான இந்த தொடர் 9 ஜூலை முதல் 6 நாட்களுக்கு ஒளிபரப்பானது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads