கஸ்தூரி (நடிகை)
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கஸ்தூரி (பிறப்பு: மே 1, 1974) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1992 'மிஸ் மெட்ராஸ்' அழகிப் போட்டியில் வென்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
கஸ்தூரி மே 1, 1974 ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் சென்னையில் படித்து முடித்தார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார்.[1] இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.[2]
திரைப்படம் வாழ்க்கை
இவர் 1991 ஆம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜா என்பவர் இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டு 'சக்ரவர்த்தி' என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), புதிய முகம் (1993), அமைதிப்படை (1994), அன்னமய்யா (1997) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒரு தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தினை கஸ்தூரி குறித்து ரிச்சர்டு பிரேயரும் என்.சி ராஜாமணி இயக்கியுள்ளனர்.[3][4] கஸ்தூரி சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகியிருந்தாலும் 'தி பைபாஸ்' என்னும் இந்தி குறும்படத்திலும், 2010 இல் தமிழ் படத்தின் வாயிலாகம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.[5]
Remove ads
நடித்த படங்கள்
தொலைக்காட்சி
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads