காட்மியம் அசிட்டேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காட்மியம் அசிட்டேட்டு (Cadmium acetate) என்பது Cd(CH3CO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும்.. நிறமற்ற திடப்பொருளான இச்சேர்மம் ஒரு அணைவுப் பல்லுறுப்பி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணைவுச் சேர்மத்தில் அசிட்டேட்டு ஈனிகள் காட்மியம் உலோக மையங்களுடன் சேர்ந்து இணைந்திருக்கிறது. நீரிலி மற்றும் நீரேற்று என்ற இரண்டு வடிவங்களிலும் இது காணப்படுகிறது. காட்மியம் ஆக்சைடுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்ப்பதன்மூலம் இதைத் தயாரிக்கலாம்:[2][3]
- CdO + 2 CH3COOH → Cd(CH3COO)2 + H2O.
Remove ads
பயன்கள்
பீங்கான் மற்றும் மண்பாண்டத் தொழிலில் மெருகுப்பூச்சாக காட்மியம் அசிட்டேட்டு பயன்படுகிறது. மின்முலாம் பூசும் தொட்டிகள், நெசவுத் தொழிலில் சாயமூட்டுதல் மற்றும் அச்சிடுதல்]] ஆகியவற்றில் இது பயனாகிறது. மேலும், கந்தகம், செலினியம், மற்றும் தெல்லூரியம் முதலிய தனிமங்களைப் பகுப்பாய்வு செய்யப் பயன்படும் பகுப்பாய்வு செயலியாகவும் விளங்குகிறது[3].
தயாரிப்பு
காட்மியம் ஆக்சைடுடன் அசிட்டிக் அமிலம் சேர்ப்பதன் மூலம் காட்மியம் அசிட்டேட்டைத் தயாரிக்கலாம். இம்முறையைத் தவிர காட்மியம் நைட்ரேட்டுடன் அசிட்டிக் நீரிலியைச் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.
முன்பாதுகாப்பு
பன்னாட்டு புற்றுநோய் ஆய்வு நிறுவனம் காட்மிய சேர்மங்களைத் தொகுதி ஒன்றில் அடங்கியுள்ள புற்றுநோயாக்கிகள் என்று வகைப்படுத்தியுள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads