காட்மியம் புரோமைடு

From Wikipedia, the free encyclopedia

காட்மியம் புரோமைடு
Remove ads

காட்மியம் புரோமைடு (Cadmium bromide) என்பது ஐதரோ புரோமிக் அமிலத்தினுடைய காட்மியம் உப்பு ஆகும். இளமஞசள் நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு நீரில் கரைகிறது. மற்ற காட்மியம் சேர்மங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் நச்சு மிக்கதாக காணப்படுகிறது. இதனுடைய மூலக்கூறு வாய்பாடு CdBr2 என்பதாகும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

பயன்கள்

ஒளிப்படச் சுருள்கள் தயாரிப்பு , கல் அச்சுக்கலை மற்றும் குடைதல் அல்லது செதுக்குதல் முதலான தொழில்களில் காட்மியம் புரோமைடு பயன்படுகிறது.

தயாரிப்பு

காட்மியத்தை புரோமின் ஆவியுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக காட்மியம் புரோமைடு தயாரிக்கப்படுகிறது. உலர் காட்மியம் அசிட்டேட்டை தூய அசிட்டிக் அமிலத்துடன் மற்றும் அசிட்டைல் புரோமைடுடன் சேர்ப்பதன் மூலமாகவும் இச்சேர்மத்தைத் தயாரிக்க இயலும். இம்முறைகள் தவிர காட்மியம் அல்லது காட்மியம் ஆக்சைடை ஐதரோ புரோமிக் அமிலத்துடன் சேர்த்து நீரியம் வாயுச்சூழலில் கரைசலை ஆவியாக்கியும் மாற்றுமுறையில் காட்மியம் புரோமைடு தயாரிக்கப்படுகிறது.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads