காம்ஜோங் மாவட்டம்

மணிப்பூரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காம்ஜோங் மாவட்டம் (Kamjong district) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் காம்ஜோங் ஆகும். உக்ருல் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 8 டிசம்பர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2] [3] [4] [5] [6] [7]இதன் நிர்வாகத் தலைமையிடம் காம்ஜோங் ஆகும். இம்மாவட்டம் மாநிலத் தலைநகரான இம்பால் நகரத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விரைவான உண்மைகள் காம்ஜோங் மாவட்டம், நாடு ...
Remove ads

புவியியல்

கடல் மட்டத்திலிருந்து 3114 மீட்டர் கிழக்கு இமயமலையில் அமைந்த இம்மாவட்டத்தின் கிழக்கில் மியான்மர் நாட்டின் நீண்ட எல்லையும், மேற்கில் சேனாபதி மாவட்டம், வடக்கில் உக்ருல் மாவட்டம் மற்றும் தெற்கில் சந்தேல் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மக்கள்

2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட் இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 45,616 ஆகவுள்ளது. மக்கள்தொகையில் பழங்குடி இன 94% தங்குல் நாகா மக்களும், 4.59% குக்கி மக்களும் வாழ்கின்றனர். இம்மாவட்ட மக்களில் கிறித்துவ சமயத்தை பெரும்பான்மையாக பயில்கின்றனர்.

வருவாய் வட்டங்கள்

இம்மாவட்டத்தில் 4 வருவாய் வட்டங்கள் கொண்டது.[8]

  • காம்ஜோங் வட்டம்
  • சஹாம்பூங்
  • கசோம் குல்லென் வட்டம்
  • புயூங்கியார் வட்டம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads