காயல்பட்டினம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காயல்பட்டினம் தொடருந்து நிலையம் (Kayalpattinam railway station) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்நிலையம் மதுரை இரயில்வே கோட்டத்திற்கு சொந்தமானதாகும்.[1] திருநெல்வேலி - திருச்செந்தூர் இரயில் பாதை 1923 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்திய அரசாங்கத்தால் முக்கியமாக மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்காக போடப்பட்டு இந்நிலையம் திறக்கப்பட்டது.[2] இந்தப் பகுதி உப்பு உற்பத்திக்கு பிரபலமானது என்பதால் ஆரம்ப நாட்களில் உப்பு மற்றும் சர்க்கரை இந்த வழியாக முக்கிய ஏற்றுமதியாக இருந்தது. குறுகிய பாதை மாற்றத்திற்காக 2006 ஆம் ஆண்டு 70 கி.மீ. குறுகிய பாதை மூடப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் அகலப்பாதை பாதை திறக்கப்பட்டது. இந்தப் பகுதி 2022 ஆம் ஆண்டில் மின்மயமாக்கப்பட்டது.
Remove ads
சேவைகள்
- செந்தூர் விரைவு- சென்னைக்கு செல்லும் ஒரே நேரடி தொடருந்து[3]
- பாலக்காடு சந்திப்பு-திருச்செந்தூர் சந்திப்பு (வழி:பழனி)
- திருநெல்வேலி -திருச்செந்தூர் பயணிகள் இரயில்
- தூத்துக்குடி-திருச்செந்தூர் பயணிகள் இரயில்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads