கார்கிவ் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்கீவ் மாகாணம் (Kharkiv Oblast) (உக்ரைனியன்: Харківська́ о́бласть, also referred to as , உக்ரைனியன்: Ха́рківщина), உக்ரைன் நாட்டின் 24 மாகாணங்களில் ஒன்றாகும்.[4]உக்ரைன் நாட்டின் வடகிழக்கில், ருசியாவின் எல்லைப்பகுதியில் அமைந்த கார்கீவ் மாகாணத்தின் தலைநகரம் கார்கீவ் மாநகரம் ஆகும். 31,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கார்கீவ் மாகாணத்தின் மக்கள் தொகை 26,33,834 ஆகும். இதன் அலுவல் மொழி உக்ரேனியம் ஆகும். இம்மாகாணம் 27 மாவட்டங்களையும், 7 பெரிய நகரங்களையும், 17 நகரங்களையும், 61 பேரூராட்சிகளையும், 1683 கிராமங்களையும் கொண்டது.
Remove ads
அமைவிடம்
கார்கீவ் மாகாணத்தின் வடக்கில் உருசியா நாடும், கிழக்கில் லுகான்சுக் மாகாணும், தென்கிழக்கில் தானியெத்சுக் மாகாணமும், தென்மேற்கில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணமும், மேற்கில் பொல்டாவா மாகாணமும், வடமேற்கில் சுமி மாகாணமும் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கார்கிவ் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 28,95,800 ஆகும். அதில் ஆண்கள் 1,328,900 (45.9%) மற்றும் பெண்கள் 1,566,900 (54.1%) ஆகும். இம்மாகாணத்தில் உக்ரேனியம் 53.8%, உருசிய மொழியை 44.3% மற்றும் பிற மொழிகளை 1.9% பேர் பேசுகின்றனர். 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாகாண்த்தின் இனக்குழுக்கள்:
- உக்ரேனிய மக்கள் – 70.7%,
- ருசியர்கள் – 25.6%,
- பெலரசியர்கள் – 0.5%
- யூதர்கள் – 0.4%,
- ஆர்மீனியர்கள் – 0.4%,
- அசரிரியர்கள் – 0.2%,
- ஜார்ஜியர்கள் – 0.15%,
- தாத்தர்கள் – 0.14%,
- பிறர் – 2.1%,;
Remove ads
பொருளாதாரம்
தொழில் துறை பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் இம்மாகாணத்தில், பொறியியல், உலோகவியல், உற்பத்தித் துறை, வேதியியல் பொருட்கள் உற்பத்தி, உணவுப் பதனிடுதல் முக்கியத் தொழிலாக உள்ளது. மேலும் வேளாண்மைத் துறையிலும் சிறந்து விளங்குகிறது.[5]மேலும் கார்கீவ் நகரம் வானூர்திகள் கட்டுப்பாட்டு மையம் தொடர்பான கருவிகள் உற்பத்தி செய்கிறது. இம்மாகாணம் எரிவாயு உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது.
நிர்வாகப் பிரிவுகள்
கார்கீவ் மாகாணம் 7 நகரங்களாகவும், 7 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads