காவல் கீதம்
எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காவல் கீதம் (Kaaval Geetham) என்பது 1992 ஆம் ஆண்டய தமிழ் அதிரடி, காதல் திரைப்படமாகும். இதை எஸ். பி. முத்துராமன் இயக்க, விக்ரம், சித்தாரா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
Remove ads
கதை
பிரியா (சித்தாரா) ஒரு குற்றப் பலணாய்வு பத்திரிகையாளர். ஆமில வீச்சால் முகம் சிதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கற்பழிப்பு மற்றும் கொலை குறித்து அவர் விசாரித்து வருகிறார். காவல் ஆய்வாளர் அசோக் (விக்ரம்) அதே பகுதிக்கு பணிக்கு நியமிக்கப்படுகிறார். ஒரு சமயம் அவர் பிரியாவை கொலைகாரனின் அடியாளிடமிருந்து காப்பாற்றுகிறார். கொலைகாரனைக் கைதுசெய்து, பிரியாவுடன் காதல் தொடங்குகிறார். ஒரு நாள், அர்த்தநாரி (சின்னி ஜெயந்த்); என்ற ஒரு நபர் அசோக்கிடம் தனது பக்கத்து வீட்டுக்காரரும் நடனக் கலைஞருமான ரமேஷ் (சாய்குமார்) என்பவர் தனது மனைவியுடன் கத்தி சண்டையிட்டப் பிறகு கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் குறிப்பிடுகிறார்;.
ரமேஷின் மகளான சிறுமியை பிரியாவும் அசோக்கும் தற்செயலாக சந்திக்கின்றனர். சிறுமியின் தாய் தங்கம் ரமேஷால் கிராமத்தில் ஏமாற்றப்பட்டதாக விசாரணையில் தெரிய வருகிறது. ரமேசும் அவரது காதலி ரத்னாவும் (டிஸ்கோ சாந்தி) தங்கத்தை கொன்று, சிறுமியையும் கொல்ல செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் அசோக்கால் சிறுமி காப்பாற்றப்படுகிறார்கள். குற்றவியல் விசாரணை தொடரும்போது, ரமேஷ் மெதுவாக சாட்சிகளை பல்வேறு நேர்மையற்ற வழிகளில் கலைக்கிறார்.
பின்னர் என்ன ஆகிறது என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.
Remove ads
நடிகர்கள்
- ஆய்வாளர் அசோக்காக விக்ரம்
- பிரியாவாக சித்தாரா
- தேவி ரமேஷாக தேவிஸ்ரீ
- டேவிட்டாக சார்ல்
- அர்த்தநாரியாக சின்னி ஜெயந்த்
- ரமேசாக சாய் குமார்
- ரத்னாவாக டிஸ்கோ சாந்தி
- ஜோப்படியாக எம். எசு. பாசுகர்
தயாரிப்பு
பெஹிண்ட்வுட்சுக்கு அளித்த செவ்வியில் விக்ரம் தனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார்.[1]
இசைப்பதிவு
இப்படத்தில் இளையராஜா இசையமைத்த ஆறு பாடல்கள் இருந்தன. பாடல்களை பிறைசூடன் மற்றும் வாலி எழுதியுள்ளனர்.[2]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads