கிராமிய இசை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிராமிய இசை (Folk music) கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப்பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு. பாரம்பரிய நாட்டுப்புற இசை , நடனத்தை விவரிக்க "நாட்டுப்புறவியல்" என்ற ஆங்கிலச் சொல், பரவலாக ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. அவை, அதன் நாட்டுப்புற பாடல் சேகரிப்பாளர்கள் மற்றும் மறுமலர்ச்சியாளர்களையும் உள்ளடக்கியிருந்தன. [1]
Remove ads
கிராமிய இசை வகைகள்
தொட்டில் முதல் சுடுகாடு வரை கிராமியப்பாடல்கள் பாடப்படுகின்றன. கிராமியப்பாடல்கள் பலவகைப்படும்:
- ஒழுக்கப்பாட்டு, வேதாந்தப்பாட்டு, பழமொழிப்பாட்டு, இறைவணக்கப்பாட்டு
- நலுங்கு, தாலாட்டு, ஆரத்தி, ஊஞ்சல், மசக்கை, நோன்பு, சடங்கு, ஒப்பாரி. இவை குறிப்பிட்ட காலங்களில் பாடப்படுவன.
- புதிர்ப்பாட்டு, கோமாளிப்பாட்டு, கும்மி, கோலாட்டம் முதலியவை ஓய்வுகாலங்களில் மன உற்சாகத்திற்காகப் பாடப்படுபவை.
- தொழிற்பாட்டு, உழவுப்பாட்டு, நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, சுண்ணாம்பு இடிப்பார்பாட்டு, தெம்மாங்கு முதலியவை வேலை செய்யும்போது பாடப்படுபவை.
- மழைப்பாட்டு, பிரார்த்தனைப்பாட்டு, பூசாரிப்பாட்டு, புராணப்பாட்டு, விழாப்பாட்டு, சிகிச்சைப்பாட்டு, சுகாதாரக் கும்மிப் பாட்டு என்பவை சில சந்தர்ப்பங்களுக்காகப் பாடப்படுபவை.
Remove ads
கிராமிய இசைக்கருவிகள்
- இழவு வீட்டில் நாட்டார் இசை (கோப்பு விவரம்)
- எட்டையாபுரத்தில் மரணம் நிகழ்ந்த வீட்டின் முன் மறைந்தவருக்கு மதிப்பு செய்யும் வகையிலும் அவரது உடல் கிடத்தி இருக்கும் வரை விழித்திருந்து காக்கும் வகையிலும் கருவிகள் இசைக்கப்படுகின்றன.
- ஒளிக்கோப்பை பார்ப்பதில் சிக்கலா? பார்க்கவும் ஊடக உதவி.
திரையிசையில் கிராமிய இசை
"மண்வாசனை வீசும் கிராமிய இசையை தமிழகமெங்கும் தவழவிட்டவர் இளையராஜா. கிராமிய மெட்டு, கிராமிய இசைக் கருவிகள் ஆனால் மேற்கத்திய பாணியில் வாத்தியங்களின் ஒருங்கிணைப்பு என்று இசைக்கலைஞனின் கற்பனையில் உச்சத்தில் நின்று பாடல்களை வழங்கியவர் இளையராஜா."
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads