கில்ச்சிபூர் சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கில்ச்சிபூர் சமஸ்தானம் (Khilchipur State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ராஜ்கர் மாவட்டத்தின் கில்ச்சிபூர் தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கில்ச்சிபூர் சமஸ்தானம் 710 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 31,143 மக்கள் தொகையும், ஆண்டு வருவாய் ரூபாய் 1,14,000 கொண்டிருந்தது.[1] இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .
Remove ads
வரலாறு
கில்ச்சிபூர் இராச்சியத்தை 1544-ஆம் ஆண்டில் நிறுவியவர் திவான் உக்கிர சென் ஆவார். 17-ஆம் நூற்றாண்டில் கில்ச்சிபூர் இராச்சியம், மராத்தியப் பேரரசின் ஒரு சிற்றரசாக மாறியது.[2] மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற கில்ச்சிபூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.
கில்ச்சிபூர் சமஸ்தானம் பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தில் இது பிரித்தானிய இந்தியாவின் மத்திய இந்திய முகமையின் செயல்பட்டது. கில்ச்சிபூர் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி கில்ச்சிபூர் சமஸ்தானம், புதிய மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, கில்ச்சிபூர் சமஸ்தானப் பகுதிகள் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ராஜ்கர் மாவட்டத்தின் கில்ச்சிபூர் தாலுகாவில் இணைக்கப்பட்டது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads