கிழக்கத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கத்திய தொடருந்து மண்டலம் (Eastern Railway (ER)) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் கொல்கத்தாவில் பெர்லீ அரண்மனையில் இருந்து செயற்படுகின்றது. இது நான்கு கோட்டங்களை உள்ளடக்கியது.
Remove ads
வரலாறு
1845ல் கிழக்கு இந்திய ரயில்வே நிறுவனம் (EIR) தில்லியையும் கிழக்கு இந்தியாவையும் இணைக்க ஒருங்கிணைக்கப்பட்டது. 15 ஆகத்து 1854ல் முதல் தொடருந்து ஹவுரா மற்றும் ஹூக்லியில் இடையே இயக்கப்பட்டன. முதல் ரயில் 08:30 மணிக்கு ஹவுரா தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு 91 நிமிடங்களுக்குப் பிறகு ஹூக்ளியை அடைந்தது. 1 ஜனவரி 1925 அன்று பிரித்தானிய இந்திய அரசு கிழக்கு இந்திய ரயில்வே நிர்வாகத்தினை கையகப்படுத்தியது.[1]
14 ஏப்ரல் 1952ல், கிழக்கத்திய தொடருந்து மண்டலமானது, முந்தைய கிழக்கு இந்தியன் இரயில்வேயின் பிரிவுகளான ஹவுரா, ஆசன்சோல் மற்றும் தானாபூர் மேலும் பெங்கால் நாக்பூர் இரயில்வே முழுவதும்(BNR) மற்றும் முந்தைய பெங்கால் அசாம் இரயில்வேயின் பிரிவான சீல்டா கோட்டம் ஆகிய அனைத்தும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.[2] (இது ஏற்கனவே 15 ஆகத்து 1947ல் கிழக்கு இந்தியன் இரயில்வேயோடு இணைக்கப்பட்டிருந்தது).
1 ஆகத்து 1955ல், பெங்கால் நாக்பூர் இரயில்வேயின்(BNR) தெற்கிலுள்ள சில பகுதிகளான ஹவுரா முதல் விசாகப்பட்டினம் வரை, மத்தியப் பகுதிகளான ஹவுரா முதல் நாக்பூர் வரை மேலும் வடமத்திய பகுதியிலுள்ள கத்னி வரைக்கும் தனியே பிரிக்கப்பட்டு தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா) உருவாக்கப்பட்டது.[3][4]
பின்னர் தன்பாத், முகல்சராய் மற்றும் மால்தா ஆகிய மூன்று கோட்டங்கள் உருவாக்கப்பட்டன.[5]
30 செப்டம்பர் 2002வரைக்கும் கிழக்கத்திய தொடருந்து மண்டலமானது ஏழு கோட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. பின்பு 1 அக்டோபர் 2002 முதல் புதிய மண்டலமாக கிழக்கு மத்திய ரயில்வே உருவாக்கப்பட்டது. அது கிழக்கத்திய தொடருந்து மண்டலத்திலிருந்து தானாபூர், தன்பாத், முகல்சராய் ஆகிய கோட்டங்களை பிரித்து உருவாக்கப்பட்டது.[4] தற்போது கிழக்கத்திய தொடருந்து மண்டலம் நான்கு கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது.


Remove ads
குறிப்புகள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads