கிழக்கு அனடோலியா பிராந்தியம்

From Wikipedia, the free encyclopedia

கிழக்கு அனடோலியா பிராந்தியம்
Remove ads

கிழக்கு அனடோலியா பிராந்தியம் ( Eastern Anatolia Region, துருக்கியம்: Doğu Anadolu Bölgesi ) என்பது துருக்கியின் ஒரு புவியியல் பகுதி ஆகும்.

விரைவான உண்மைகள் கிழக்கு அனடோலியா பிராந்தியம் Doğu Anadolu Bölgesi, நாடு ...
Thumb
துருக்கியின் பிராந்தியங்கள்

1941 இல் முதல் புவியியல் பேரவை இப்பகுதிக்கான பெயரை "டோசு அனடோலு பால்கேசி" என்று வரையறுத்தது. இது துருக்கியின் சராசரி உயரத்தைவிட இந்த பிராந்தியத்தின் சராசரி உயரமானது மிக உயர்ந்தது ஆகும். மேலும் இந்த பிராந்தியமானது மிகப்பெரிய புவியியல் பகுதி மற்றும் துருக்கியின் அனைத்து பிராந்தியங்களைவிட மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்டதாக உள்ளது. துருக்கிய அரசினால் அதன் தற்போதைய பெயரைப் பெறுவதற்கு முன்பு, இப்பிராந்தியத்தின் பெரும்பகுதியானது ஆர்மேனிய மேட்டுநிலங்கள் என்று அழைக்கப்படும் பிராந்தியத்தில் உள்ள ஆறு ஆர்மீனிய மாகாணங்களின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2] ஆர்மீனிய இனப்படுகொலைக்குப் பின்னர், வரலாற்று ரீதியாக மேற்கு ஆர்மீனியா என்று அழைக்கப்பட்டுவந்ததை மாற்றுவதற்காக "கிழக்கு அனடோலியா" என்ற புவிசார் அரசியல் சொல் உருவாக்கப்பட்டது.[3][4][5][6][7]

Remove ads

மேற்கு ஆர்மீனியா பெயர்மாற்றம்

Thumb
ஆர்மீனிய இனப்படுகொலை மற்றும் துருக்கி குடியரசு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்மீனிய உயர்நிலம் (அல்லது மேற்கு ஆர்மீனியா ) என்பது துருக்கிய அரசாங்கத்தால் "கிழக்கு அனடோலியா" என்று பெயர் மாற்றப்பட்டது.[3][4][5]

1880 ஆம் ஆண்டு தொடங்கி, ஆர்மீனியாவின் பெயரை உத்தியோகப் பூர்வமான ஒட்டோமான் ஆவணங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இது ஆர்மீனியர்களின் வரலாற்றை தங்கள் சொந்த நாட்டில் தணிக்கை செய்யும் ஒரு முயற்சியாக இருந்தது.[5][6][7] இரண்டாம் சுல்தான் அப்துல் ஹமீத் அரசாங்கம் ஆர்மீனியா என்ற பெயரை "குர்திஸ்தான்" அல்லது "அனடோலியா" என்று மாற்றியது. இடப்பெயர்களை "தேசியமயமாக்கல்" செயல்முறையானது இளம் துருக்கியர்களின் கருத்தியல் வாரிசுகளாக இருந்த கெமாலிஸ்டுகளால் தொடர்ந்து குடியரசுக் காலத்தில் வலிமையைப் பெற்றது. 1923 முதல் மேற்கு ஆர்மீனியாவின் முழு நிலப்பரப்பும் அதிகாரப்பூர்வமாக “கிழக்கு அனடோலியா” (அதாவது கிழக்கத்திய கிழக்கு ) என மறுபெயரிடப்பட்டது.[3][4]

Thumb
1895 வரைபடம் ஆர்மீனியாவிற்கும் அனடோலியாவிற்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது

அனடோலியா என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் “சூரிய உதயம்” அல்லது “கிழக்கு” என்று பொருள். இந்த பெயர் அனத்தோலியா தீபகற்பத்திற்கு ஏறக்குறைய கிமு 5 அல்லது 4 ஆம் நூற்றாண்டுகளில் வழங்கப்பட்டது. ஒட்டோமான் காலத்தில், அனடோலோ என்ற சொல் ஆசியா மைனரின் வடகிழக்கு விலேட்களை உள்ளடக்கியதாக இருந்தது, கியோட்டாஹியா அதன் தலைநகராக இருந்தது. ஏராளமான ஐரோப்பிய, ஒட்டோமான், ஆர்மீனியன், உருசிய, பாரசீக, அரபு மற்றும் பிற முதன்மை சான்றுகளானது ஆர்மீனியா என்ற சொல்லை அனடோலியாவுடன் சேர்த்து குழப்பவில்லை. ஆர்மீனிய தேசம் தனது தாயகத்தில் இன்னும் பெரும்பான்மையைக் கொண்டிருந்தது, இது ஒட்டோமான் ஆக்கிரமிப்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கு இது மற்றவற்றுடன் சாட்சியமளிக்கிறது.[3]

வரலாற்று ரீதியாக ஆர்மீனிய உயர்நிலம் அனடோலியாவின் கிழக்கே அமைந்துள்ளது, அவற்றுக்கு இடையேயான எல்லை சிவாஸ் (செபாஸ்டியா) மற்றும் கெய்சேரி (சிசேரியா) அருகே அமைந்துள்ளது. எனவே, ஆர்மீனியாவை "கிழக்கு அனடோலியா" இன் ஒரு பகுதியாக குறிப்பிடுவது தவறானது.[6]

17 ஆம் நூற்றாண்டில், ஆர்மீனிய குறித்த சர்வதேச இராஜதந்திர நிகழ்ச்சி நிரலில், ஆர்மீனியாவைக் குறிக்க "அனடோலியா" அல்லது "கிழக்கு அனடோலியா" என்ற சொற்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. மேலும், 16 ஆம் நூற்றாண்டின் "இஸ்லாமிய உலக வரைபடம்" மற்றும் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் பிற ஒட்டோமான் வரைபடங்கள் ஆர்மீனியாவை (எர்மெனிஸ்தான்) ஒரு குறிப்பிட்ட பிரதேசமாகவும் அதன் நகரங்கலும் தெளிவாகக் காட்டியுள்ளன.[3]

ஆர்மீனியா, அதன் எல்லைகளுடன், 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை முந்தைய ஒட்டோமான் வரலாற்றாசிரியர்களாலும் மற்றும் அவர்களின் படைப்புகளில் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 17 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஒட்டோமான் வரலாற்றாசிரியரான கெட்டிப் செலெபி தனது ஜிஹான் நுமா புத்தகத்தில் “ஆர்மீனியா என்று அழைக்கப்படும் நாட்டைப் பற்றி” என்ற சிறப்பு அத்தியாயத்தைக் கொண்டிருந்தது. இருப்பினும், இந்த புத்தகம் 1957 இல் மீண்டும் வெளியிடப்பட்டபோது, அதன் நவீன துருக்கிய ஆசிரியர் எச். செலன் இந்த தலைப்பை “கிழக்கு அனடோலியா” என்று மாற்றினார். 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் வரலாற்றாசிரியரான ஒஸ்மான் நூரி, ஆர்மீனியாவை அவர் மூன்று தொகுதிகளாக எழுதிய அப்துல் ஹமீத் மற்றும் அவரது ஆட்சியின் காலம் என்ற நூல்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்.[3]

1960 களில், சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ்ஸேர் பெர்னில் உள்ள துருக்கிய தூதரின் வேண்டுகோளின் பேரில் தங்கள் விமானங்களில் வழங்கிய வரைபடங்களிலிருந்து 'ஆர்மீனிய பீடபூமி' என்ற சொல்லை நீக்கியது.[5]

Remove ads

உட்பிரிவு

மாகாணங்கள்

கிழக்கு அனடோலியா பிராந்தியத்தில் உள்ள மாகாணங்கள்:

அமைவிடம் மற்றும் எல்லைகள்

கிழக்கு அனடோலியா பகுதி துருக்கியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது மேற்கில் துருக்கியின் மத்திய அனடோலியா பிராந்தியத்தால் சூழப்பட்டுள்ளது; வடக்கே துருக்கியின் கருங்கடல் பிராந்தியம் ; தெற்கில் தென்கிழக்கு அனடோலியா பகுதி மற்றும் ஈராக் ; கிழக்கில் ஈரான், அஜர்பைஜான், ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியா ஆகியவையும் உள்ளது. மேலும்   கிழக்கு அனடோலியா தெற்கு காகசஸ் பகுதி மற்றும் லெஸ்ஸர் காகசஸ் மலை பீடபூமியுடன் ஒன்றுடன் ஒன்று இணைகிறது.

இப்பகுதியின் பரப்பளவு 146,330   கி.மீ.², இது துருக்கியின் மொத்த பரப்பளவில் 18.7% ஆகும்.

Remove ads

மக்கள் தொகை

இப்பகுதியின் மொத்த மக்கள் தொகை 6,100,000 (2000 மக்கள் தொகை கணக்கெடுப்பு) என்று இருந்தது. இது 5,906,565 (2014 மதிப்பீடு) என்று இருந்தது. துருக்கியில் கிராமப்புற மக்கள் தொகை மிகுந்த பிராந்தியமாக கருங்கடல் பிராந்தியத்திற்கு அடுத்து இப்பகுதியில் இரண்டாவதாக உள்ளது . இடம்பெயர்வு நிலை (பிற பிராந்தியங்களுக்கு, குறிப்பாக மர்மாரா பிராந்தியத்திற்கு) அதிகமாக உள்ளது மற்றும் மக்கள் அடர்த்தி (40 நபர் / கி.மீ.²) என்று உள்ளது. இது துருக்கியின் சராசரியை விட (98 நபர் / கி.மீ.²) குறைவாகும். இந்த பிராந்தியத்திலிருந்து துருக்கியின் மற்ற பிராந்தியங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பலம்பெயர்வது இயற்கையான மக்கள்தொகை அதிகரிப்பை விட கூடுதலாக உள்ளது, இது பிராந்தியத்தின் மக்கள் தொகையில் சிறிய சரிவுக்கு வழிவகுக்கிறது.

Remove ads

நிலவியல்

பிராந்தியத்தின் சராசரி உயரம் 2,200 மீ. ஆகும். இதன் முக்கிய புவியியல் அம்சங்களில் சமவெளி, பீடபூமிகள் மற்றும் மாசிஃப்கள் அடங்கும். இக்காலத்திலும் சில எரிமலைகள் இங்கு செயல்பாட்டில் உள்ளன.

காலநிலை மற்றும் இயற்கை

இப்பிராந்தியத்தின் பெரும்பகுதியானது கடலில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாலும், அதிக உயரத்தில் இருப்பதாலும், நீண்ட குளிர்காலம் மற்றும் குறுகிய கோடைகாலங்களைக் கொண்ட கடுமையான கண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில், இது மிகவும் குளிரானதாகவும், பனிமூட்டம் கொண்டதாகவும் இருக்கும், கோடையில் வானிலை மலைப்பகுதிகளில் குளிர்ச்சியாகவும், தாழ்வான பகுதிகளில் வெப்பமாகவும் இருக்கும். துருக்கியின் அனைத்து பிராந்தியங்களைவிட இந்த பிராந்தியத்தில் மிகக் குறைந்த சராசரி வெப்பநிலை உள்ளது, குளிர்கால வெப்பநிலையானது -25   ° செ ஆக இருக்கிறது. இது சிலசமயம் -40 ° செ க்கு கீழே கூட செல்கிறது. கோடை கால வெப்பநிலையானது சராசரியாக சுமார் 20 ° செ வெப்பநிலையில் இருக்கிறது.

இந்த பிராந்தியத்தின் ஆண்டு வெப்பநிலையில் உள்ள வேறுபாடானது துருக்கியின் மற்ற பிராந்தியங்களைவிட மிக உயர்ந்தது. இப்பிராந்தியத்ல் சில பகுதிகள் வெவ்வேறு நுண் காலநிலைகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஐடார் ( அரரத் மலைக்கு அருகில்) லேசான காலநிலை உள்ளது.

இப்பிராந்தியானது துருக்கியின் மொத்த வனப்பகுதியில் 11% ஐ கொண்டுள்ளது. மேலும் இந்த வனப்பகுதியானது பூர்வீக தாவரங்கள் மற்றும் விலங்குகளால் நிறைந்துள்ளது. ஓக் மற்றும் மஞ்சள் பைன் மரங்கள் பெரும்பான்மையாக காடுகளில் உள்ளன.

இப்பகுதியில் நீர் மின் ஆற்றலுக்கு மிகுதியான சாத்தியங்கள் உள்ளன.   [ மேற்கோள் தேவை ]

Remove ads

இதனையும் காண்க

இறுதிக் குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads