கீழக்கொருக்கை பிரம்மஞான புரீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரம்மஞான புரீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பிரம்மஞான புரீசுவரர் மற்றும் தாயார் புஷ்பவல்லி என்ற புஷ்பாம்பிகை ஆவர். தீர்த்தம் சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் இரண்டு நந்தி சிலைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று மூலவரை நோக்கியும், மற்றொன்று தாயாரை நோக்கியும் ஒரே மண்டபத்தில் கட்டப்பட்டுள்ளன.[1]
Remove ads
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டத்தின் கீழக்கொருக்கை புறநகர்ப் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 50.41 மீட்டர்கள் (165.4 அடி) உயரத்தில் (10.928851°N 79.382955°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கும்பகோணம் பகுதியிலிருந்து சுமார் 5 கி. மீ. தூரத்தில் பட்டீஸ்வரம் அருகில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.[2]
Remove ads
புராண முக்கியத்துவம்
மது மற்றும் கைடபர் என்ற இரண்டு அசுரர்கள், பிரம்மாவிடமிருந்து அவருடைய படைப்புத் தொழில் இரகசியங்கள் அடங்கிய பிரமாணங்களைக் கவர்ந்து சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்தனர். இது பற்றி பிரம்மா விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு அவதாரம் கொண்டு, பிரமாணங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார்.
ஆனால், பிரம்மனோ ஞாபக சக்தியை இழந்து, பிரம்ம இரகசிய மந்திரங்களை மறந்தும், படைப்புத் தொழிலை செய்ய முடியாமலும் அல்லலுற்றார். எனவே, பிரம்மன் மீண்டும் விஷ்ணுவிடம் தன் நிலையை எடுத்துக் கூற, விஷ்ணு, பிரம்மனிடம் பூலோகத்தில் கீழக்கொருக்கை என்னுமிடத்தில் சந்திர புஷ்கரணியில் நீராடி, அத்திருத்தலத்தில் சிவனை தியானித்து முறையிட்டு, பூசைகள் செய்ய அறிவுறுத்தினார்.
பிரம்மனும் தன் மனைவி சரசுவதியுடன், விஷ்ணு அறிவுரைப்படி செய்ய, அவருடைய தியானத்தை மெச்சிய சிவன், பிரம்மனுக்கு மீண்டும் பழைய படியே நினைவுகள் திரும்பி ஞானதிருஷ்டியுடன் படைப்புத் தொழிலை மேற்கொள்ள அருள்புரிந்தார். பிரம்மனின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் சிவன், பிரம்மஞான புரீசுவரரர் என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார்.[3]
Remove ads
இதர தெய்வங்கள்
அர்த்தநாரீசுவரர், கிரதா மூர்த்தி, பிரம்மா, சப்தசுர விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சூரியன், சந்திரன், சனி பகவான், மனைவியுடன் அதிகார நந்தி மற்றும் பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads