குந்தாபுரா (கருநாடகம்)

From Wikipedia, the free encyclopedia

குந்தாபுரா (கருநாடகம்)map
Remove ads

குந்தாபுரா (கன்னடம்:ಕುಂದಾಪುರ) (ஆங்கிலம்:Kundapura) என்பது இந்தியாவின், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம் ஆகும். இந்த நகரத்தை குந்தாபுரா நகராட்சி மன்றம் நிர்வகிக்கிறது. மேலும் இந்த நகரின் வட்டாட்சியும் குந்தாபுரா நகரேயாகும்.[1]

விரைவான உண்மைகள் மொழிகள் ...
Remove ads

வரலாறு

குந்தாபுரா நகரம் இப் பெயர் இப் பகுதியை ஆட்சி செய்த குந்தாவர்மா மன்னரின் பெயரிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். மேலும் பஞ்சகங்கவள்ளி ஆற்றின் அருகே குந்தாவர்மனால் கட்டப்பட்ட குந்தேசுவர் கோயிலைக் காணலாம். கன்னடத்தில் குந்தா என்றால் தூண் என்றும் புரா என்றால் நகரம் என்று பொருள்.[2] தூண்களின் மூலம் கட்டப்படும் வீடுகள் பாரம்பரிய முறையை குறிக்கிறது. குந்தாபுரா நகரின் மூன்று பக்கங்களிலும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. வடக்கே பஞ்சகங்கவள்ளி ஆறும், கிழக்கே கலா​​கர் ஆறு உள்ளது. மேற்கே கொடியில் கடற்கழி மற்றும் அரபிக்கடலால் சூழ்ந்துள்ளது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2001 ஆம் ஆண்டின் படி இந்த நகரில் 30,444 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 14,840 ஆண்களும், 15,604 பெண்களும் ஆவார்கள். குந்தாபுரா நகர மக்களின் சராசரி எழுத்தறிவு 92% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94%, பெண்களின் கல்வியறிவு 88% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. குந்தாபுரா நகர மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 2,614 பேர் ஆவார்கள்.

Remove ads

போக்குவரத்து

குந்தாபுரா நகரின் வழியாக இந்தியாவின் மும்பை அருகே உள்ள பன்வேல் நகரையும், கேரளாவில் உள்ள கொச்சி நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 17 இந்த நகரின் வழியே அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையானது நகரங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் நகரங்களையும் இணைக்கிறது. மேலும் குந்தாபுரா நகரிலிருந்து சுமார் 87 கிலோமீட்டர் (54 மைல்) தொலைவில் மங்களூர் சர்வதேச விமான நிலையம் உள்ளது. மேலும் மும்பை இருந்து மங்களூர் வழியாக இயங்கும் கொங்கண் இருப்புப்பாதை, இணைக்கப்பட்டுள்ளது. இதன் தொடருந்து நிலையம் நகரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் (2.5 மைல்) துலைவில் உள்ளது.

ஆதாரங்கள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads