குறுவிலங்காடு
கேரளத்தின், கோட்டையம் மாவட்டதில் உள்ள ஊர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குறுவிலங்கடு (Kuravilangad) என்பது கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது மாவட்ட தலைநகரான கோட்டயத்திற்கு வடக்கே 22 கி.மீ தொலைவிலும், நகராட்சிப்பகுதியான பாலாவிலிருந்து மேற்கே 17 கி.மீ. தொலைவிலும், மீனாசில் வட்டத்தில் அமைந்துள்ளது.
குறுவிலங்காடானது வட கோட்டயம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஊராகும். குறுவிலங்கடு பஞ்சாயத்தில் தொட்டுவா, கப்பும்தலா, வக்காடி, குரியநாடு, மன்னக்கநாடு, எலகாடு, கலத்தூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
குறுவிலங்காடு இங்குள்ள யாத்ரீக மையமான குறுவிலங்காடு தேவாலயத்திற்காக அறியப்படுகிறது. இந்த தேவாலயமானது அதிகாரப்பூர்வமாக செயின்ட் மேரிஸ் சிரோ-மலபார் மேஜர் ஆர்க்கிபிஸ்கோபல் சர்ச் என்று அறியப்படுகிறது. பாரம்பரிய நம்பிக்கையின்படி இந்த தேவாலயம் பொ.ஊ. 105 இல் நிறுவப்பட்டது.
Remove ads
கல்வி
குறுவிலங்கடு உள்ளூர் பகுதிகளின் கல்வி மையமாக உள்ளது. இப்பகுதியானது கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்ட மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதாக உள்ளது. இங்குள்ள குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்களில் தேவ மாதா கல்லூரி, குறுவிலங்காடு [1] செயின்ட் மேரிஸ் எச். எஸ், [2] செயின்ட் அன்னேஸ் எச்.எஸ்.எஸ், டி பால் எச்.எஸ்.எஸ், சவரா மலை உயர்நிலைப்பள்ளி மற்றும் செயின்ட் மேரிஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவை அடங்கும். [3]
Remove ads
குறிப்பிடத்தக்க மக்கள்
இந்தியாவின் 10 வது ஜனாதிபதி கே. ஆர். நாராயணன், குறுவிலங்காட்டைச் சேர்ந்தவர், புனித மேரி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் (1936–38) மெட்ரிக் படிப்பை படித்தவர்[சான்று தேவை]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads