குவாரசமியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவாரசம் அல்லது கோரசமியா என்பது மேற்கு நடு ஆசியாவில் ஆமூ தாரியா ஆற்றுக் கழிமுகத்தில் இருக்கும் ஒரு பெரிய பாலைவனச் சோலை பகுதி ஆகும். இதன் வடக்கில் (முன்னாள்) ஏரல் கடலும், கிழக்கில் கிசில்கும் பாலைவனமும், தெற்கில் காராகும் பாலைவனமும் மற்றும் மேற்கில் உசுதையுர்து பீடபூமியும் அமைந்துள்ளன. இது ஈரானிய[1] குவாரசமிய நாகரிகத்தின் மையம் ஆகும். பாரசீகப் பேரரசு போன்ற தொடர்ச்சியான பேரரசுகள் இங்கே அமைந்திருந்தன. அவற்றின் தலைநகரங்களான கத், குர்கஞ்ச் (தற்கால கொன்யே-ஊர்கஞ்ச்) மற்றும் கிவா (16ஆம் நூற்றாண்டில் இருந்து) இப்பகுதியில் அமைந்திருந்தன. இந்நாளில் கவரசமின் பகுதிகள் உசுபெக்கிசுத்தான் மற்றும் துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் பகுதிகளாக உள்ளன.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads