கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையம்

கோலாலம்பூர், கெப்போங் சாலையில் ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையம்map
Remove ads

கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Metro Prima MRT station; மலாய்: Stesen MRT Metro Prima) என்பது மலேசியா, கோலாலம்பூர், கெப்போங், கெப்போங் சாலை பகுதியில் அபி அபி 1 சாலைச் சந்திப்புக்கு (Jalan Api Api 1) அருகில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும்.

விரைவான உண்மைகள் PY10 கெப்போங் பாரு, பொது தகவல்கள் ...

கெபோங் பாரு நிலையம் சப்பானிய ஜென் வடிவமைப்புகளுடன் செராம்பி பாணி (Serambi-style) வடிவமைப்பைக் கொண்டுள்ளது.[1] இந்த நிலையத்தை ஓங்&ஓங் நிறுவனத்தினர் வடிவமைத்துள்ளனர்.[2][3]

கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் முதலாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் இந்த நிலையம் 2022 சூன் 16 அன்று செயல்படத் தொடங்கியது.[4]  PY09  மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையத்திற்கும்;  PY11  ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் இந்த நிலையம் அமைந்துள்ளது; மற்றும் இந்த நிலையத்தின் குறியீடு  PY10  ஆகும்.[5] கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்குமாடி அமைப்பைக் கொண்டது.[6]

Remove ads

வரலாறு

இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் (தற்போது புத்ராஜெயா வழித்தடம்) மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம் ஒரு பகுதியாக இருக்கும் என 15 செப்டம்பர் 2016 அன்று எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. அதன் பின்னர் கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தின் வடக்குப் பகுதியில் ஓர் உயர்ம்ட்ட நிலையமாக உருவாக்கப்பட்டது.

கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையம் சூன் 16, 2022-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[7][8] மேலும் அதே காலக்கட்டத்தில்,  PY01  குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் தொடங்கி  PY13  கம்போங் பத்து எம்ஆர்டி நிலையம் வரையிலான 12 புத்ராஜெயா வழித்தடத்தின் பிற நிலையங்களும் செயல்படத் தொடங்கின.

Remove ads

நிலைய அமைவு

இந்த நிலையம் 54 மலேசிய கூட்டரசு சாலை 54-இல் அமைந்துள்ளது. மெட்ரோ பிரைமா வணிக மையத்திற்கு இந்த நிலையம் முதன்மையாகச் சேவை செய்கிறது.

தைவானிய பௌத்த சமய அமைப்பான இசு சி அமைப்புடன் இணைக்கப்பட்ட ஜிங் சி (Jing Si Hall) பௌத்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையத்திலிருந்து 250 மீ தென்கிழக்கில் அமைந்துள்ளது.

நிலைய அமைவிடம்

கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையம் 3 நுழைவாயில்களைக் கொண்டது. அத்துடன் இந்த நிலையம் அடுக்கு மாடி அமைப்பைக் கொண்ட நிலையமாகும். தரை மட்டத்திலிருந்து இரண்டு நிலைகளைக் கொண்டு உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பைக் கொண்டது. முதல் நிலை இணைப்புவழி தளமாகும்; இரண்டாம் நிலையின் மேல் தளத்தில் இரட்டை வழித்தடங்களும்; ஒரு தீவு மேடையில் இரண்டு நடைமேடைகளும் உள்ளன.

கெப்போங் பாரு நிலைய வழித்தடத்தின் முனையத்திற்குச் செல்ல இரண்டு நடைமேடைகள் உள்ளன; நடைமேடை 1 புத்ராஜெயா சென்ட்ரலுக்கும், நடைமேடை 2 குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்திற்கும் செல்கின்றன.

நிலைய அமைவு

இந்த நிலையம் கெப்போங் பாரு நகர்ப்புறத்தில், 54 மலேசிய கூட்டரசு சாலை 54-இல் அமைந்துள்ளது; மற்றும் லாமான் ரிம்புனான் (Laman Rimbunan), யூயென் லாங் சீனர் கோயில் (Yuen Long Chinese Temple), விசுத்தா முத்தியாரா சொகுசுமாடி வீடுகள் (Vista Mutiara Condominium), கெப்போங் தொழில்முனைவோர் பூங்கா (Kepong Entrepreneur Park), கெப்போங் வணிகம் மற்றும் தொழில்துறை பகுதி (Kepong Business and Industrial Area), படாசோ முத்தியாரா குடியிருப்பு பகுதிகளுக்கு (Fadaso Mutiara Park) அருகில் உள்ளது.

நிலைய அமைப்பு

L2
எம்ஆர்டி நடைமேடை
PY தெற்கு திசை 12  புத்ராஜெயா  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் (ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம்)
 PY41  மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ஊனமுற்றவர் அணுகல்
 PY04  மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ஊனமுற்றவர் அணுகல்
PY வடக்கு திசை 12  புத்ராஜெயா  PY04  குவாசா டாமன்சாரா (மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம்)
L1 இணைப்புவழி கட்டணப் பகுதி, பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம் ஊனமுற்றவர் அணுகல்
G தரை நிலை நுழைவு/வெளியேறும் வழி, பேருந்து நிறுத்தம், வாடகை தனியார் வாகனங்கள் ஊனமுற்றவர் அணுகல்

நிலையத்தின் மேல் பகுதியில் 1 தீவு மேடையில் 2 நடைமேடைகள் உள்ளன.

Remove ads

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், இலக்கு ...
Remove ads

பேருந்து சேவைகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, தொடக்கம் ...

காட்சியகம்

கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (2022)

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads