கே. எம். ஜார்ஜ்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. எம். ஜார்ஜ் (K. M. George) (18 ஜனவரி 1919-11 டிசம்பர் 1976) கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியா அரசியல் கட்சியான கேரள காங்கிரசின் நிறுவனர் தலைவர்.
கே. எம். ஜார்ஜ் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1964இல் பி. டி. சாக்கோ இறந்த பிறகு, கொந்தளிப்பான சூழ்நிலையில், கே. எம். ஜார்ஜ் தலைமையில் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டு, சட்டசபையில் ஒரு தனி குழுவாக அமர்ந்து, ஆர். சங்கர் அமைச்சரவையை கவிழ்த்த்னர். பின்னர், கோட்டயத்தில் இவரது தலைமையில் கேரள காங்கிரசு என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கினர்.
Remove ads
சொந்த வாழ்க்கை
ஜார்ஜ் 1919 ஜனவரி 18 அன்று மூவாற்றுப்புழை என்ற ஊரில் பிறந்தார். மார்த்தம்மா படிஞ்சரேக்கரா என்பவரை மணந்த இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் கே. பிரான்சிஸ் ஜார்ஜ், இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு முறை இடுக்கி மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ஜார்ஜ் 1976 டிசம்பர் 11 அன்று செ. அச்சுத மேனனின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியபோது இறந்தார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads