கே. பி. இராமச்சந்திரன் நாயர்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. பி. இராமச்சந்திரன் நாயர் (K. P. Ramachandran Nair) தேசிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனராவார். இவர், 01 செப்டம்பர் 1983 முதல் 29 மே 1985 வரை கேரள அமைசரவையில் சுகாதார அமைச்சராகவும் இருந்தார்.[3][4] இவர் டாக்டர் கே.பி. பணிக்கர் என்பவருக்கு 1 ஜனவரி 1922 இல் பிறந்தார்.[5] இவர் டி.ரத்தினம்மாவை மணந்தார்.[5] 28 பிப்ரவரி 2004 இல் இறந்தார்.[5]
Remove ads
அரசியல் வாழ்க்கை
இராமச்சந்திரன், "நாயர் சேவை அமைப்பின்" செயல்பாடுகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். ஒரு காலத்தில் அதன் பொருளாளராகவும் அதன் இயக்குநர் குழு உறுப்பினராகவும் இருந்தார்.[4] இந்திய தேசிய காங்கிரசு கட்சி மூலம் அரசியலில் நுழைந்த போதிலும், பின்னர் இவர் நாயர் சேவை அமைப்பின் அரசியல் பிரிவான தேசிய ஜனநாயகக் கட்சியை உருவாக்க உதவினார்.
இவர் 1968-79 வரை ஆழப்புழா நகராட்சி மன்றத் தலைவராக இருந்தார்.[3] 1982இல் கேரள மாநில சட்டசபை தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பி. கே. வாசுதேவன் நாயரை 1590 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[6] 1991 கேரள மாநில சட்டசபை தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சோமசேகரனை தோற்கடித்து 746 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[7] இரண்டு முறையும் இவர் ஆலப்புழா சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். கே. கருணாகரனின் மூன்றாவது அமைச்சகத்தில், இவர் 01 செப்டம்பர் 1983 முதல் 29 மே 1985 வரை சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றார்.[3]
தேர்தல்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads