பி. கே. வாசுதேவன் நாயர்

கேரளத்தின் 7வது முதலமைச்சர் From Wikipedia, the free encyclopedia

பி. கே. வாசுதேவன் நாயர்
Remove ads

பி.கே.வி என பிரபலமாக அறியப்படும் படையாத் கேசவப்பிள்ளை வாசுதேவன் நாயர் (Padayatt Kesavapillai Vasudevan Nair) (2 மார்ச் 1926 - 12 ஜூலை 2005) கேரளாவின் ஒன்பதாவது முதல்வராகவும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தார். இவர் 1957, 1962, 1967, 2004 இல் நான்கு முறை மக்களவைக்கும் , 1977, 1980 இல் இரண்டு முறை கேரள சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அ. கு. ஆன்டனி முதல்வர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, 20 அக்டோபர் 1978இல் இவர் முதல்வர் ஆனார்.[7] எனினும் ஐக்கிய முன்னணியிலுள்ள மற்ற கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவர் 7 அக்டோபர் 1979இல் பதவி விலகினார்.

விரைவான உண்மைகள் பி. கே. வாசுதேவன் நாயர்P. K. Vasudevan Nair, 7வது கேரள முதலமைச்சர் ...
Remove ads

பதவி

இவர் திருவிதாங்கூர் மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு, அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிறுவனர்-தலைவராக இருந்தார். 1964இல் பொதுவுடைமை இயக்கத்தில் பிளவு ஏற்பட்ட பிறகு இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியுடன் இருந்தார். மேலும், 1982 இல் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறப்பு

பி. கே. வாசுதேவன் நாயர், நீண்டகால இதய நோயாலும் கடுமையான நீரிழிவு நோயாலும் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் 12 ஜூலை 2005 அன்று பிற்பகல் 3.35 மணியளவில் புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில்இறந்தார்.[7]

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads