கேஎல்சிசி சொத்து நிறுவனம்
மலேசியாவில் ஒரு சொத்து முதலீட்டு நிறுவனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேஎல்சிசி சொத்து நிறுவனம் (மலாய்; KLCC Property Holdings Berhad; ஆங்கிலம்: KLCC Property Holdings) (KLCCP) என்பது மலேசியாவில் ஒரு சொத்து முதலீட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம், தனக்குச் சொந்தமான அலுவலகங்கள், சில்லறை விற்பனைகள் மற்றும் விடுதி மனைச் சொத்துக்களை நிர்வகிக்கிறது.[2]
இதன் செயல்பாடுகள் பெரும்பாலும், கோலாலம்பூர் நகர மையப் பகுதியில் (KLCC) மையம் கொண்டுள்ளன. இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் அல்லது இந்த நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சொத்துக்களில் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள் முக்கியமானவை.[3]
இந்த இரட்டைக் கோபுரங்கள் 1998 முதல் 2004 வரை; உலகின் மிக உயரமான கட்டிடங்களாகச் சாதனை படைத்தன. அவற்றுக்கு அடுத்து சூரியா கேஎல்சிசி, மாண்டரின் ஓரியண்டல் மற்றும் மெக்சிஸ் கோபுரம் போன்ற அசையா சொத்துகளையும் நிர்வகிக்கிறது.[4][5]
Remove ads
பொது
இந்த நிறுவனம், பர்சா மலேசியா (Bursa Malaysia) எனும் மலேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தக் குழுமத்தின் 75% பங்குகள், நேரடி மற்றும் மறைமுக நலன்கள் மூலம் பெட்ரோனாஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ளன.[6]
கேஎல்சிசி சொத்து நிறுவனம். சூன் 2015 இல், RM12 பில்லியன் நிகர சொத்து மதிப்பைக் கொண்டு மலேசியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்றாக உள்ளது.[7][8]
சொத்துடைமை
- பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள்[9]
- பெட்ரோனாஸ் கோபுரம் 3
- எக்சோன் மோபில் கோபுரம்
- டாயாபூமி வளாகம்[10]
- கோலாலம்பூர் மாண்டரின் ஓரியண்டல் (75%)[11]
- சூரியா கேஎல்சிசி (60%)
- மெக்சிஸ் கோபுரம் (33%)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads