கேரளா காங்கிரஸ் கட்சி

இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

கேரளா காங்கிரஸ் கட்சி
Remove ads

கேரள காங்கிரசு (Kerala Congress) என்பது கேரளா கோட்டயத்தில் 9 அக்டோபர் 1964 அன்று கே. எம். ஜார்ஜ் தலைமையிலான முன்னாள் இந்திய தேசிய காங்கிரசு தலைவர்களால் நிறுவப்பட்ட ஓர் இந்திய அரசியல் கட்சியாகும்.[4] இந்தக் கட்சி, கேரளாவில் முதன்மையாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வருகிறது.[5][6] ஆரம்பத்தில் இதனை சிரிய கிறிஸ்தவர்கள், தெற்கு கேரளாவின் நாயர் சமூகத்தினர் ஆதரித்தனர்.[7]

விரைவான உண்மைகள் கேரள காங்கிரசு கட்சி, சுருக்கக்குறி ...

கேரள காங்கிரசு, ஆர். சங்கர் தலைமையிலான காங்கிரசு அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பி. டி. சாக்கோவின் ராஜினாமாவும், பின்னர் அவரின் மறைவுக்குப் பின்னர் தொடங்கப்பட்டது.[5][8] கேரள சட்டமன்றத்தின் காங்கிரசின் பதினைந்து அதிருப்தி உறுப்பினர்கள் சங்கர் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தனர்.[5] கே. எம். ஜார்ஜ், இரா. பாலகிருஷ்ண பிள்ளை, பிற தலைவர்கள், சிரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபை மற்றும் நாயர் சமூக சேவை தலைவர் மன்னத்து பத்மநாபன் ஆகியோரின் ஆதரவுடன், 9 அக்டோபர் 1964 அன்று கோட்டயம் திருநாக்கர மைதானத்தில் "கேரள காங்கிரசு" கட்சியினைத் தொடங்கினர்.[4][5][8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads