கொடுங்கையூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொடுங்கையூர் (ஆங்கிலம்:Kodungaiyur), சென்னை மாநகரத்தின் வடகோடியில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். சென்னை மாநகராட்சியின் எல்லை இங்கிருந்து ஆரம்பமாகிறது. (சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளில், முதல் இரண்டு வார்டுகள் கொடுங்கையூரில் அமைந்துள்ளன.) கொடுங்கையூரின் அஞ்சல் குறியீட்டு எண் 600 118.
Remove ads
அமைவு
கொடுங்கையூர், அதனுடைய வடக்கு திசையில் சேலவாயல் மற்றும் சின்ன சேக்காடு வரையிலும், கிழக்கு திசையில் எழில் நகர் வரையிலும், மேற்கு திசையில் மாதவரம் பால்பண்ணை வரையிலும், தென்மேற்கு திசையில் மூலக்கடை வரையிலும், தெற்கு திசையில் MKB நகர் (வியாசர்பாடி) வரையிலும் பரந்து விரிந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை எண்: 5, கொடுங்கையூரின் தென்மேற்கு திசையில் மூலக்கடையை தொட்டு செல்கிறது.
பிரதான சாலைகள்
- காமராஜர் சாலை -> திருவள்ளுவர் சாலை -> மணலி சாலை (மூலக்கடையிலிருந்து சின்னகொடுங்கையூர் செல்லும் சாலை).
- தண்டயார்பேட்டை நெடுஞ்சாலை (மூலக்கடையிலிருந்து கவியரசு கண்ணதாசன் நகர் வழியாக எழில் நகர் செல்லும் சாலை).
- எத்திராஜ்சாமி சாலை ( எருக்கஞ்சேரியிலிருந்து M.R. நகர் செல்லும் சாலை).
- மீனாம்பாள் சாலை (MKB நகரிலிருந்து கவியரசு கண்ணதாசன் நகர் செல்லும் சாலை).
மாநகரின் பிற பகுதிகளில் இருந்து கொடுங்கையூரின் தொலைவு
- பெரம்பூரில் இருந்து - 4.5 கீ.மீ
- பாரிமுனையில் இருந்து - 9.5 கீ.மீ
- சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து - 9 கீ.மீ
- எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து - 10 கீ.மீ
- புறநகர் பேருந்து நிலையத்தில் (கோயம்பேடு) இருந்து - 14 கீ.மீ
- விமான நிலையத்தில் இருந்து - 26.5 கீ.மீ
Remove ads
போக்குவரத்து வசதிகள்
மாநகர போக்குவரத்துக்கழகம் (MTC), கொடுங்கையூரின் போக்குவரத்து தேவைகளை பூர்த்திசெய்து கொண்டிருக்கிறது. கொடுங்கையூரில் மொத்தம் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை கவியரசு கண்ணதாசன் நகர், பார்வதி நகர், முத்தமிழ் நகர் ஆகும்.
கவியரசு கண்ணதாசன் நகர்
கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் கொடுங்கையூரின் மிகவும் முக்கியமான பேருந்து நிலையமாகும்.
பார்வதி நகர்
பார்வதி நகர் பேருந்து நிலையம், கொடுங்கையூரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய பேருந்து நிலையமாகும். இப்பேருந்து நிலையத்திற்கு மிகவும் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், கொடுங்கையூரின் இப்பகுதி மக்கள் தானியை (Auto rickshaw) போக்குவரத்திற்காக நம்பி உள்ளனர்.
கொடுங்கையூரிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் பற்றிய விபரம்:
கவியரசு கண்ணதாசன் நகரிலிருந்து
பார்வதி நகரிலிருந்து-
முத்தமிழ் நகரிலிருந்து
Remove ads
கொடுங்கையூரின் உட்பகுதிகள்
சேலவாயல், நாராயணசாமி தோட்டம், பார்வதி நகர், வெங்கடேஸ்வரா நகர் (பகுதி 1 & 2), சீதாராம் நகர், RV நகர், யூனியன் கார்பைடு காலனி, சாஸ்த்ரி நகர், ஜம்புலி நியூ காலனி, பொன்னுசாமி நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், விவேகானந்தா நகர், சௌந்தர்யா நகர், அம்பிகா நகர், முத்தமிழ் நகர், M.R. நகர், சின்னாண்டி மடம், கவியரசு கண்ணதாசன் நகர், காந்தி நகர், டீச்சர்ஸ் காலனி, ஆகியவை கொடுங்கையூரின் உட்பகுதிகள் ஆகும்.
கல்வி நிலையங்கள்
கொடுங்கையூரில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல கல்வி நிலையங்கள் அமையப்பெற்றுள்ளது. அதன் விபரங்கள் வருமாறு:
கல்லூரிகள்-
- திருத்தங்கல் நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலவாயல்
- முத்துக்குமாரசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்தமிழ் நகர் .
பள்ளிக்கூடங்கள்-
- டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, எருக்கஞ்சேரி
- குரு மூர்த்தி மேல்நிலை பள்ளி, RV நகர்
- FES மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, முத்தமிழ் நகர்
- க்ரேஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, சின்னகொடுங்கையூர்
- புனித மேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
- வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
Remove ads
வழிபாட்டுத் தலங்கள்
கொடுங்கையூரில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்கள் :
கோவில்கள்
- அருள்மிகு சோலையம்மன் திருக்கோயில்
- அருள்மிகு காமாட்சி அம்மன் வகையறா திருக்கோயில், கவியரசு கண்ணதாசன் நகர்
- பவானி அம்மன் திருக்கோவில், முத்தமிழ் நகர்.
- குரு விநாயகர் ஆலயம், RV நகர்.
- கலசாத்தம்மன் ஆலயம், பார்வதி நகர்.
- சங்கர விநாயகர் ஆலயம், பெரியகொடுங்கையூர்.
கொடுங்கையூரின் உட்பகுதிகளில் தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன.
மருத்துவமனைகள்
கொடுங்கையூரில் அமைந்துள்ள மருத்துவமனைகள் :
- பவித்ரா மருத்துவமனை, எருக்கஞ்சேரி
- சுபா மருத்துவமனை.
- நூர் மருத்துவமனை, சின்னகொடுங்கையூர்
- பாத்திமா மருத்துவமனை, பெரியகொடுங்கையூர் (மூலக்கடை அருகில்)
- NRV மருத்துவமனை, பெரியகொடுங்கையூர்
- ESI மருத்துவமனை, MR நகர்
சமுதாயக்கூடங்கள்
கொடுங்கையூரில் அமைந்துள்ள சமுதாயக்கூடங்கள்/திருமண மண்டபங்கள் பற்றிய விபரம்:
- AB மாளிகை, சின்ன கொடுங்கையூர்
- மாலதி மஹால், முத்தமிழ் நகர்
- குழந்தை தெரேசா மண்டபம், கவியரசு கண்ணதாசன் நகர்
- ஈஸ்வரி மஹால், எருக்கஞ்சேரி
- ராஜ் ஹால், கவியரசு கண்ணதாசன் நகர்
- தனபாக்கியம் ஹால், மீனாம்பாள் சாலை
- SK மஹால், மீனாம்பாள் சாலை
வங்கிகள்
கொடுங்கையூரில் அமைந்துள்ள வங்கிகளின் விபரங்கள்:
- பாரத ஸ்டேட் வங்கி, எத்திராஜ்சாமி சாலை, MR நகர் (ATM வசதியுடன்)
- பாங்க் ஆப் இந்தியா, எத்திராஜ்சாமி சாலை, MR நகர் (ATM வசதியுடன்)
- இந்தியன் வங்கி, மீனாம்பாள் சாலை (ATM வசதியுடன்)
- ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கி, TH சாலை.
இதர தானியங்கி பணம் வழங்கும் மையங்கள் (ATM)
- SBI ATM,கவியரசு கண்ணதாசன் நகர் EB பின்புறம்
- ICICI வங்கி ATM, செம்பியம் EB எதிரில், மூலக்கடை
- ஆக்சிஸ் வங்கி ATM, மூலக்கடை
- பாங்க் ஆப் இந்தியா ATM, முத்துக்குமாரசாமி கல்லூரி எதிரில், முத்தமிழ் நகர்
Remove ads
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம்
சென்னை மாநகராட்சி குப்பை கொட்டும் வளாகங்களில் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகமும் ஒன்று. வட சென்னை மற்றும் மத்திய சென்னையில் சேகரிக்கப்படும் ஏறத்தாழ 3200 டன் எடைக்கொண்ட குப்பைகள் தினமும் இங்கு கொட்டபடுகிறது. தென் சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகரின் தெற்கே அமைந்துள்ள பெருங்குடியில் கொட்டபடுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
