கொண்டித்தோப்பு

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கொண்டித்தோப்பு (Kondithope) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி.[1][2] இவ்வூர், மக்கள் நெருக்கம் மற்றும் விற்பனை நிலையங்கள் அதிகம் கொண்ட பகுதியாகும். வாகனங்களுக்குக் கடன் மற்றும் நகைக்கடன் அளிக்கும் நிறுவனங்களை நடத்தி வரும் சைனர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியாகும்.[3] இந்தியாவில் 1943ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொண்டித்தோப்பு பகுதியும் அடங்கும்.[4]

விரைவான உண்மைகள் கொண்டித்தோப்புKondithope, நாடு ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொண்டித்தோப்பு பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°06'10.9"N 80°16'38.6"E (அதாவது, 13.103040°N 80.277400°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்

ஜார்ஜ் டவுன், ராயபுரம், பாரிமுனை, காசிமேடு, மண்ணடி, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகியவை இவ்வூருக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

இவ்வூருக்கு அருகில் செல்லும் சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா நெடுஞ்சாலை மற்றும் வால்டாக்ஸ் சாலை வழியாக எண்ணற்ற அரசு மாநகரப் பேருந்துகள் செல்வதால், இங்குள்ள மக்களின் சாலைப் போக்குவரத்து எளிதாக உள்ளது.

தொடருந்து போக்குவரத்து

இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலேயே உள்ள பேசின் பாலம் சந்திப்பு தொடருந்து நிலையம் மூலம் இங்குள்ள மக்கள் பயன் பெறுகின்றனர்.

கல்வி

பள்ளி

சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று கொண்டித்தோப்பில் உள்ளது.[5]

தொழில்

இரும்பு பாதுகாப்புப் பெட்டகங்கள் தயாரிப்பு மட்டுமல்லாது வார்ப்புத் தொழில், பொறியியல் தொழில் சார்ந்த வேலைகள் கொண்டித்தோப்பில் அதிகமாகக் காணப்படுகின்றன.[6] மேலும் நெகிழி சார்ந்த பொருட்கள் தயாரிக்கத் தேவையான, மறுசுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.[6] ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் மற்றும் ஸ்ரீவேணி பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இங்குள்ள விற்பனை நிலையங்களில் குறிப்பிடத்தக்கவை.[7]

Remove ads

ஆன்மீகம்

கோயில்கள்

கற்பக விநாயகர் கோயில் மற்றும் இலந்தை முத்துமாரியம்மன் கோயில் ஆகியவை கொண்டித்தோப்பிலுள்ள முக்கிய கோயில்களாகும்.[8]

பொழுதுபோக்கு

பூங்கா

இங்குள்ள முக்கியமான பொழுதுபோக்கு இடம் சிவஞானம் பூங்கா ஆகும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads