கோண்ந்வானா கணதந்திர கட்சி

From Wikipedia, the free encyclopedia

கோண்ந்வானா கணதந்திர கட்சி
Remove ads

கோண்ந்வானா கணதந்திர கட்சி (Gondwana Gantantra Party) என்பது கீரா சிங் மார்க்கம் என்பவரால் நிறுவப்பட்ட இந்தியாவில் உள்ள ஒரு மாநிலக் கட்சியாகும்.[2][3] இதனுடைய முதன்மையாக நோக்கம் பழங்குடி சமூகம் மற்றும் அதன் அரசியல் மேம்பாடாகும்.[4][5][6]

விரைவான உண்மைகள் கோண்ந்வானா கணதந்திர கட்சி, சுருக்கக்குறி ...
Remove ads

வரலாறு

கோண்ந்வானா கணதந்திர கட்சியானது 1991ஆம் ஆண்டு கோண்டு மக்களின் உரிமைகளுக்காக வாதிடவும், மத்திய இந்தியாவில் கோண்ட்வானா என்ற தனி இந்திய மாநிலத்தை நிறுவவும் உருவாக்கப்பட்டது.

தேர்தல்கள்

உத்தரப்பிரதேசத்தில் 2002-ல் மாநிலச் சட்டப் பேரவைதேர்தலில் கோண்ட்வானா கணதந்திர கட்சி 8 வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்கள் மொத்தமாக 11,262 வாக்குகளைப் பெற்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தலில்[7] 2003ஆம் ஆண்டில் 61 வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்கள் 5,12,102 வாக்குகளைப் பெற்றனர். மூவர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சத்தீசுகர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 2003ஆம் ஆண்டில் 41 பேர் போட்டியிட்டனர். ஆனால் யாரும் தேர்ந்தெடுக்கப்படாத போதிலும் இக்கட்சி மொத்தத்தில் 1,56,916 வாக்குகளைப் பெற்றது.

2004 இந்தியப் பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராட்டிராவில் போட்டியிட்டது.[8][9][10]

Remove ads

சமீபத்திய வளர்ச்சிகள்

2018 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் கோண்ந்வானா கணதந்திரக் கட்சி சமாஜ்வாதி கட்சியுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைத்தது.[11]

மேற்கோள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads