கோத்தா தாருல் எசான்

From Wikipedia, the free encyclopedia

கோத்தா தாருல் எசான்map
Remove ads

கோத்தா தாருல் எசான் (மலாய்: Kota Darul Ehsan; ஆங்கிலம்: Kota Darul Ehsan; சீனம்: 雪兰莪牌楼) என்பது கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்திற்கும் மலேசிய மாநிலமான சிலாங்கூர் மாநிலத்திற்கும் இடையே மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலையில் எல்லையைக் குறிக்கும் வளைவுகளின் அமைப்பைக் குறிப்பிடுவது ஆகும்.[1]

விரைவான உண்மைகள் கோத்தா தாருல் எசான் Kota Darul Ehsan, பொதுவான தகவல்கள் ...

மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை 2-இல் அமைக்கப்பட்டுள்ள இந்த வளைவு மலேசியாவின் மிகப்பெரிய வளைவு ஆகும்.

Remove ads

வரலாறு

1 பிப்ரவரி 1974-இல், கோலாலம்பூர் மாநகரை ஒரு கூட்டரசுப் பிரதேசமாக அமைப்பதற்காக, சிலாங்கூரில் இருந்து மத்திய அரசுக்கு கோலாலம்பூர் மாநகரை மாற்றும் உடன்படிக்கையில் கையெழுத்தானது. அதன் நினைவாக கோலாலம்பூர் - சிலாங்கூர் எல்லைப் பகுதியில்; கோலாலம்பூர் - கிள்ளான் நெடுஞ்சாலையில், 1981-இல், கோத்தா தாருல் எசான் (Kota Darul Ehsan) எனும் வளைவு அமைக்கப்பட்டது.[2]

மலேசிய மத்திய அரசுக்கு சிலாங்கூர் மாநிலத்தின் தியாக உணர்வை இந்த வளைவு குறிக்கிறது. இந்த வளைவு 1981-இல் கட்டி முடிக்கப்பட்டது. 3 சனவரி 1982 அன்று சிலாங்கூரின் மறைந்த சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.[3]

Remove ads

கட்டிடக்கலை

வளைவின் வடிவமைப்பு மூரிஷ் கட்டிடக்கலையின் தாக்கங்களைக் கொண்டது.மேலும் கோலாலம்பூர் தொடருந்து நிலையத்துடன் இதே போன்ற வடிவமைப்பைப் பகிர்ந்து கொள்கிறது. கோத்தா தாருல் எசான் வளைவில் உள்ள குவிமாடங்களில் இதைக் காணலாம்.

கோத்தா தாருல் எசான் வளைவின் ஒவ்வொரு புறத்திலும் இரண்டு பீரங்கிகளைக் கொண்டுள்ளது.

காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads