கோலா நெருசு மாவட்டம்
மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோலா நெருசு மாவட்டம் (ஆங்கிலம்: Kuala Nerus District; மலாய்: Daerah Kuala Nerus; சீனம்: 瓜拉尼鲁斯; ஜாவி: كوالا نيروس) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
திராங்கானு மாநிலத்தில் மிகப் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மாவட்டம் எனும் பெருமையும் இந்தக் கோலா நெருசு மாவட்டத்திற்கு உண்டு. 2014-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. முன்பு கோலா திராங்கானு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
இதன் தலைநகரம் கோலா நெருசு நகரம். கோங் படாக், செபெராங் தாகிர், பத்து ராகிட் மற்றும் பத்து என்னாம் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள்.
Remove ads
பொது
கோலா நெருசு மாவட்டத்தில் ரெடாங் தீவுக்கூட்டம (Redang archipelago) உள்ளது. ரெடாங் தீவு மற்றும் பினாங்கு தீவு (Pinang Island) ஆகியவை இரண்டும் முக்கிய தீவுகள். மக்கள் வசிக்கும் தீவுகள்.
மற்ற சிறிய தீவுகள் லிங் தீவு, எக்கோர் தெபு தீவு (Ekor Tebu Island), லீமா தீவு, பாகு தீவு, பாக்கு கெசில் தீவு, கெரெங்கா தீவு, மற்றும் கெரெங்கா கெசில் தீவு.
ரெடாங் தீவுக்கூட்டம்
ரெடாங் தீவுக்கூட்டம் தென் சீனக் கடலில் உள்ள கோலா திராங்கானுவில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. இந்தத் தீவுகளில் சுமார் 500 வகையான பவளப் பாறைகள் உள்ளன. மற்றும் ஆயிரக்கணக்கான மீன் இனங்கள் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் உள்ளன.
1994-ஆம் ஆண்டு ரெடாங் தீவுக்கூட்டம் ஒரு கடல் பூங்காவாக நியமிக்கப்பட்டது. மலேசியாவில், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும் மற்றும் நீருக்கடியிலான இயற்கைத் தன்மையை அனுபவிக்க மக்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்காக அந்தக் கடல் பூங்கா நிறுவப்பட்டது.
ரெடாங் தீவுகள் கார்ப்படிகங்கள் மற்றும் வண்டல் பாறைகளால் ஆனவை.[1][2][3] தவிர, லாங் தெங்கா தீவு, பிடாங் தீவு, கெலுக் தீவு மற்றும் காரா தீவு ஆகியவை கோலா நெருஸ் மாவட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
கோலா நெருசு மாவட்டம் நான்கு முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது, அவை:
- பத்து ராகிட் (Batu Rakit)
- கோலா நெருசு நகரம் (Kuala Nerus Town)
- பாகோ (பெலாரா) (Pakoh Belara)
- ரெடாங் தீவு (Redang Island)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads