கோலாலம்பூர் சிட்டிபேங்க் கோபுரம்

கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள கட்டிடம் From Wikipedia, the free encyclopedia

கோலாலம்பூர் சிட்டிபேங்க் கோபுரம்map
Remove ads

கோலாலம்பூர் சிட்டிபேங்க் கோபுரம் (மலாய்; Menara Citibank KL; ஆங்கிலம்: Citibank Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில், 190.2 மீ; (624 அடி) உயரத்தில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும்.

விரைவான உண்மைகள் கோலாலம்பூர் சிட்டிபேங்க் கோபுரம் Citibank Tower Menara Citibank KL, மாற்றுப் பெயர்கள் ...

இதே போல ஆங்காங்கில் ஒரு சிட்டிபேங்க் கோபுரம் உள்ளது. அத்ன் பெயர் ஆங்காங் சிட்டிபேங்க் கோபுரம் (Hong Kong Citibank Tower).

50 மாடிகளைக் கொண்ட கோலாலம்பூர் சிட்டிபேங்க் கோபுரம் முழுக்கவும் வணிக மையங்களைக் கொண்டுள்ளது. பெட்ரோனாஸ் கோபுரங்களுக்கு அருகில் அமைந்துள்ள இந்த வகுப்பு A வணிகக் கோபுரம், சிட்டி வங்கி ஷரியா (Citibank Syariah) எனும் மற்றும் ஒரு வங்கியின் தலைமையகத்தையும் கொண்டுள்ளது.[3]

Remove ads

வரலாறு

இந்தக் கட்டிடம் தி லயன் குழுமத்தால் (The Lion Group) உருவாக்கப்பட்டது; மற்றும் 1995-இல் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கு முதலில் மெனாரா லயன் (Menara Lion) அல்லது லயன் கோபுரம் (Lion Tower) என்று பெயரிடப்பட்டது. 2000-ஆம் ஆண்டில், சிட்டி பேங்க் 50% பங்குகளை வாங்கி, இந்தக் கட்டிடத்திற்கு மாறியபோது, ​​இதன் பெயர் சிட்டி பேங்க் என மறுபெயரிடப்பட்டது.[4]

இந்தக் கட்டிடம் இன்வெர்பின் நிறுவனத்திற்குச் (Inverfin Sdn Bhd) சொந்தமானது. இருப்பினும் அப் செங் நிறுவனம் (Hap Seng Consolidated Bhd); மற்றும் மெனாரா சிட்டி ஓல்டிங் (Menara Citi Holding Co) நிறுவனங்களுக்கும் சமமான பங்குகள் உள்ளன.[5][6]

Remove ads

திறப்பு

கோலாலம்பூர் சிட்டிபேங்க் கோபுரம், அதன் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு, கோபுரத்தின் அடித்தளத்தில் வாகன நிறுத்துமிட வசதியைக் கொண்டுள்ளது.[7]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads