கோலாலம்பூர் விளையாட்டு நகரம்
கோலாலம்பூர் புறநகர்ப் பகுதியில் உள்ள விளையாட்டு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோலாலம்பூர் விளையாட்டு நகரம் (மலாய்:Bandaraya Sukan Kuala Lumpur; ஆங்கிலம்:KL Sports City) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு நகரம்; மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய விளையாட்டு வளாகமும் ஆகும்.
இந்த விளையாட்டு நகரம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 20 கி.மீ. தெற்கே உள்ளது. "ஒரு பூங்காவில் உள்ள விளையாட்டு வளாகம்" என்று அழைக்கப்படும் இந்த நகரம், மலேசியாவில் மட்டும் அல்லாமல் தென்கிழக்கு ஆசியாவிலும் ஒரே விளையாட்டு நகரம் எனவும் அறியப்படுகிறது.
Remove ads
பொது
இந்த நிலையம், 1998-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு (1998 Commonwealth Games) முன்னதாக 11 சூலை 1998 அன்று, மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் காமன்வெல்த் விளையாட்டுகளின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த வளாகம் 2017-ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக (2017 Southeast Asian Games) கோலாலம்பூர் விளையாட்டு நகரமாக மேம்படுத்தப்பட்டது.[2][3]
Remove ads
அணுகல்
இந்த விளையாட்டு நகரத்திற்கான அணுகல் வழிகள்:
சா ஆலாம் விரைவுச்சாலை
புக்கிட் சாலில் நெடுஞ்சாலை
கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலை
சுங்கை பீசி விரைவுச்சாலை
- SP17 புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம்
கட்டமைப்பு
கோலாலம்பூர் விளையாட்டு நகரத்தில் உள்ள கட்டமைப்புகளும் வசதிகளும்:
- புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் - (Bukit Jalil National Stadium)
- ஆக்சியாட்டா அரங்கம் (புத்ரா உள்விளையாட்டு அரங்கம்) - (Axiata Arena)
- மலேசிய தேசிய வளைதடிப் பந்தாட்ட அரங்கம் - (National Hockey Stadium)
- தேசிய நீச்சல் மையம் - (National Aquatic Centre)
- தேசிய சுவர்ப்பந்து மையம் - (National Squash Centre)
- காமன்வெல்த் பூங்கா - (Commonwealth Hill)
- குடும்பாப் பூங்கா - (Family Park)
- புக்கிட் ஜாலில் குழிப்பந்தாட்ட மன்றம் - (Bukit Jalil Golf and Country Club)
- மலேசிய தேசிய விளையாட்டு மன்றம் - (National Sports Council of Malaysia)
- புக்கிட் ஜாலில் விளையாட்டுப் பள்ளி - (Bukit Jalil Sports School)
- புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம் - (Bukit Jalil LRT Station)
- காமன்வெல்த் கிராமம் - (Vista Komanwel)
- காமன்வெல்த் காமன்வெல்த் வணிக மையம் - (Vista Komanwel Shopping Centre)
காட்சியகம்
கோலாலம்பூர் விளையாட்டு நகரத்தின் காட்சிப் படங்கள்
- மலேசிய தேசிய நீச்சல் மையம் (2022)
- புக்கிட் ஜாலில் விளையாட்டுப் பள்ளி (2022)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads