கோலாலம்பூர் மத்திய சந்தை

மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள ஒரு வரலாற்றுச் சந்தை From Wikipedia, the free encyclopedia

கோலாலம்பூர் மத்திய சந்தைmap
Remove ads

கோலாலம்பூர் மத்திய சந்தை அல்லது கோலாலம்பூர் சென்ட்ரல் மார்க்கெட் (மலாய்; Pasar Budaya; Pasar Seni; ஆங்கிலம்: Central Market Kuala Lumpur) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள ஒரு வரலாற்றுச் சந்தை ஆகும்.[1]

விரைவான உண்மைகள் கோலாலம்பூர் மத்திய சந்தை Central Market Kuala Lumpur Pasar Seni Kuala Lumpur, மாற்றுப் பெயர்கள் ...
Thumb
1916-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் மத்திய சந்தை
Thumb
கோலாலம்பூர் மத்திய சந்தை நினைவுச் சின்னம் (2024)
Thumb
கோலாலம்பூர் மத்திய சந்தை உட்பகுதி (2008)
Thumb
கோலாலம்பூர் மத்திய சந்தை உட்பகுதி (2023)
Thumb
வெளிநாட்டவர்களின் ஓய்விடமாக மத்திய சந்தை (2008)

இந்த மத்திய சந்தை, துன் டான் செங் லோக் சாலையில் (போச் அவென்யூ) உள்ளது. அருகில் உள்ள ஆங் கஸ்தூரி சாலையில் (ரோட்ஜர் தெரு), பாதசாரிகள் மட்டும் செல்லும் ஒரு பகுதி உள்ளது. இந்தச் சாலை பெட்டாலிங் தெருவில் இருந்து சில நிமிடங்கள் தொலைவில் கிள்ளான் ஆற்றுக்கு அடுத்ததாக உள்ளது.[2]

Remove ads

வரலாறு

கோலாலம்பூர் மத்திய சந்தை 1888-ஆம் ஆண்டு ஓர் ஈரச் சந்தையாக நிறுவப்பட்டது. தற்போதைய எழில்படுக் கலை வடிவ பாணியிலான கட்டிடம் 1937-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

இது மலேசிய பாரம்பரிய சங்கத்தால் (Malaysian Heritage Society) ஒரு பாரம்பரியத் தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது மலேசிய பாரம்பரியத்திற்கான ஓர் அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது.

கிள்ளான் பேருந்து நிலையம்

கோலாலம்பூர் மத்திய சந்தையின் அசல் கட்டிடம் 1888-ஆம் ஆண்டு, பிரித்தானிய மலாயாவின் குடியேற்றவிய பிரித்தானியர்களால் கட்டப்பட்டது. இது கோலாலம்பூர் குடிமக்களுக்கும்; அப்போதைய ஈயச் சுரங்கத் தொழிலாளர்களுக்கும் ஈரச் சந்தையாகப் பயன்படுத்தப்பட்டது.

சில பத்தாண்டுகளுக்கு, அந்த ஈரச் சந்தை, தொடக்க கால நகரவாசிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஏனெனில் அந்த ஈரச் சந்தைக்கு அருகில் கோலாலம்பூருக்கான ஊட்டி பேருந்து சேவையின் மையமும்; தொடருந்து நிலையமும்; கிள்ளான் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்தன.

விரிவாக்கங்கள்

1889, 1895, 1920 மற்றும் 1921-ஆம் ஆண்டுகளில் மேலும் விரிவாக்கங்கள் செய்யப்பட்டன. 1933-ஆம் ஆண்டு வாக்கில், சுமார் மலாயா டாலர் $ 167,000 செலவில் செய்யப்பட்ட விரிவாக்கங்கள், சந்தையை அதன் தற்போதைய அளவிற்குக் கொண்டு வந்தன.[3]

1970-ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூர் மாநகரம் விரைவான வளர்ச்சியை சந்தித்ததால், கோலாலம்பூர் மத்திய சந்தையை இடிக்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் மலேசிய பாரம்பரிய சங்கத்தின் தலையீடு சரியான நேரத்தில் ஈரச் சந்தையைத் தக்க வைத்தது, ஏனெனில் மலேசிய பாரம்பரிய சங்கம் அதன் கட்டுமானத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் அந்த அந்த இடம் ஒரு பாரம்பரிய தளம் என்று அறிவிக்கப்பட்டது.[4]

Remove ads

புது வடிவம்

1981-ஆம் ஆண்டு கிள்ளான் ஆற்றங்கரைக்கு அருகில் டாயாபூமி வளாகத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய போது, ​​இந்தச் சந்தை இடிக்கப் படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டது. இந்தச் சந்தையின் மறுபயன்பாட்டுப் புதுப்பித்தல் அக்டோபர் 1985-இல் தொடங்கி ஏப்ரல் 1986-இல் நிறைவடைந்தது. புதுப்பிக்கப்பட்ட இந்த மத்திய சந்தை குளிரூட்டப்பட்டது.[5] வெளிப்புறத்தில் முதலில் வெளிர் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணப்பூச்சு இருந்தது, பின்னர் வெள்ளை நிறமாக மாற்றப்பட்டது.

பின்னர் 1986 பாத்தா மாநாட்டின் போது (PATA Conference) புதிய ஈரச் சந்தை புதிய வடிவத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.[6] அந்தக் கட்டத்தில், கோலாலம்பூர் மத்திய சந்தை, வண்ணமயமான புதிய பாணியில் புதுப்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக பண்பாட்டு மையம் (Pasar Budaya) என்று அழைக்கப்பட்டது. இருப்பினும் இன்று வரையிலும் பசார் செனி (Pasar Seni) என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.[7]

Remove ads

போக்குவரத்து

கோலாலம்பூர் மத்திய சந்தையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் கிளானா ஜெயா வழித்தடத்தின்  KJ14  பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம்; மற்றும் காஜாங் வழித்தடத்தின்  KG16  பசார் செனி நிலையம் ஆகிய இரு நிலையங்கள் ஒரே இடத்தில் உள்ளன.

கோலாலம்பூர் மாநகராட்சியின் இலவச பேருந்து சேவையான GOKL 07  கோ கேஎல் நகர பேருந்து (Go KL City Bus) பசார் செனி பேருந்து நிலையத்தில் தொடங்குகிறது. இந்தப் பேருந்து நிலையம், பசார் செனி எல்ஆர்டி நிலையத்திற்கு அடுத்ததாக உள்ளது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads