கோலாலம்பூர் மருத்துவமனை

From Wikipedia, the free encyclopedia

கோலாலம்பூர் மருத்துவமனைmap
Remove ads

கோலாலம்பூர் மருத்துவமனை (மலாய்:Hospital Besar Kuala Lumpur; ஆங்கிலம்:Kuala Lumpur Hospital) (HKL) என்பது மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள மிகப்பெரிய பொது மருத்துவமனை ஆகும்.

விரைவான உண்மைகள் அமைவிடம், ஆள்கூறுகள் ...
Thumb
கோலாலம்பூர் மருத்துவமனை அமைவிடம்

மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான இந்த மருத்துவமனை கோலாலம்பூர், பகாங் சாலையில் அமைந்துள்ளது. 1870-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை, உலகின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகவும்; மலேசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனையாகவும் அறியப்படுகிறது.

வருமானம் நோக்கமற்ற பொதுநல நிறுவனமான கோலாலம்பூர் மருத்துவமனை; மலேசிய பொது சுகாதார அமைப்பின் முதன்மை மருத்துவமனையாகச் செயல்படுகிறது. அத்துடன் மருத்துவப் படிப்பிற்கான கற்பித்தல் மருத்துவமனையாகவும்; மற்றும் பிற மருத்துவமனைகளின் தலைமைப் பரிந்துரை மருத்துவமனையாகவும் செயல்படுகிறது.

Remove ads

பொது

150 ஏக்கர் பிரதான வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த மருத்துவமனையில் 84 மருத்துவமனைக் கூடங்கள் (வார்டுகள்); மற்றும் 2,300 படுக்கைகள் உள்ளன. இது உலகின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும்.

இந்த மருத்துவமனையில் உள்ள படுக்கைகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வசதி குறைந்த நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன; இது பன்னாட்டு அளவில் தரமான மலிவு மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது.[2]

புள்ளி விவரங்கள்

கோலாலம்பூர் மருத்துவமனை 54 வெவ்வேறு மருத்துவத் துறைகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  • 29 மருத்துவத் துறைகள்
  • 5 மருத்துவ ஆதரவு சேவைகள்
  • 11,000 பணியாளர்கள்
  • 2,300 மருத்துவர்கள்
  • 300 மருத்துவ நிபுணர்கள்
  • 1,300 மூத்த மருத்துவர்கள்,
  • 72 தலைமைச்செவிலியர்கள்,
  • 253 மருத்துவக்கூட மேலாளர்கள்
  • 3,500 பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள்
  • 258 சமூகச் செவிலியர்கள்[3]

முகவரி

Hospital Kuala Lumpur
50586 Jalan Pahang
Wilayah Persekutuan Kuala Lumpur.
Tel : 03-26155555
E-mel : pro.hkl[at]moh.gov.my

இணையத் தளம்: hkl.moh.gov.my/index.php/en-us/

Remove ads

காட்சியகம்

மேலும் காண்க

* மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads