கோவிந்த் வசந்தா

இந்திய இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோவிந்த் வசந்தா (Govind Vasantha) (பிறப்பு: அக்டோபர் 29, 1988) ஓர் இந்திய இசையமைப்பாளரும், பாடகரும், வயலின் இசைக்கலைஞரும் ஆவார். இவர் மலையாளத் திரையுலகிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் முக்கியமாக பணியாற்றுகிறார்.[1][2] இவர் 'தாணிக்குடம் பிரிட்ஜ்' என்ற இசைக் குழுவை நிறுவி நடத்தி வருகிறார். அதில் இவர் ஓர் பாடகராகவும், வயலின் இசைக் கலைஞராகவும் இருக்கிறார்.[1] 96 என்ற தமிழ் படத்தில் தனது பணிக்காக சிறந்த இசை இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

விரைவான உண்மைகள் கோவிந்த் வசந்தா, பிறப்பு ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

கோவிந்த், 1988 அக்டோபர் 29 அன்று பீதாம்பரன்- வசந்தகுமாரி தம்பதியினருக்குப் பிறந்தார். இவர் கேரளாவின் திரிச்சூரின் இரிஞ்ஞாலகுடாவிலுள்ள ஓர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் [3] அண்ணன் கோபிநாதன் ஓர் கர்நாடக இசைக்கலைஞர் ஆவார். மேலும் இசையின் ஆரம்பகால வெளிப்பாடு இவரது மாமா மூலமாகவே இருந்தது. கோவிந்த், சாதியை அகற்றுவதற்கான முயற்சியாக மேனன் என்ற தனது குடும்பப் பெயரை தனது தாயின் பெயரான வசந்தா என்பதை எடுத்துக் கொண்டு, கோவிந்த் வசந்தாவாக மாறினார். இது ஒரு தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியால் வெளிப்படுத்தப்பட்டது.[4] இவரது தந்தை 2012 ஆம் ஆண்டில் கேரள அரசின் நீர்ப்பாசனத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதிலிருந்து, தாணிக்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவில் நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார்.[5] கோவிந்த் தனது நீண்டகால காதலியான இரஞ்சினி அச்சுதன் என்பவரை 4 திசம்பர் 2012 அன்று திருமணம் செய்து கொண்டார். மலையாள நடிகை ஐஸ்வர்யா இலட்சுமி இவரது உறவினராவார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads